Published : 30 Apr 2019 05:19 PM
Last Updated : 30 Apr 2019 05:19 PM

பெரியார்,  பாரதிதாசன் விருது : எழுத்தாளர் ஒளிச்செங்கோ, கவிஞர் இளம்பிறைக்கு வழங்கப்பட்டது

சென்னையில் நேற்று   மாலை  (29.4.2019)  5 மணியளவில் சென்னை - வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில்  புரட்சி கவிஞர் பாரதிதாசனின் 129-வது பிறந்த நாள் விழா மற்றும்  40-வது ஆண்டு தமிழர் கலை - பண்பாட்டுப் புரட்சி விழா நடைபெற்றது.

 

இரா. தமிழ்செல்வன் தலைமையில்,  கோவி கோபால் வரவேற்புரையில் தொடங்கிய இந்த விழாவில் -  50 ஆண்டுகளுக்கும் மேலாக பகுத்தறிவு பாதையில் நடைபயின்று,  சமூக நீதிக்காக அருந்தொண்டாற்றி வரும்  திருவாரூர் மாவட்டம் - கண்கொடுத்தவணிதம் கிராமத்தைச் சேர்ந்த எழுத்தாளர், பெரியாரியலாளர் ஒளிச்செங்கோ அவர்களுக்கு தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டது.

 

ஒளிச்செங்கோ அவர்கள் பெரியாரைப் பற்றியும்,  சமூக அவலங்களுக்கு எதிராகவும் ஏராளமான படைப்புகளை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இதே விழாவில் , 25 ஆண்டுகளுக்கும் மேலாக  தமிழ் இலக்கியத் துறையில் தனக்கென்று ஒரு சிறப்பிடத்தைப் பெற்று, தன்னிகரில்லாத கவிதை படைப்பாளியாக விளங்கி,  நவீனத் தமிழுக்கு புதிய முகத்தை வழங்கிக்கொண்டிருக்கிற கவிஞர் இளம்பிறைக்கு புரட்சி கவிஞர்  பாரதி தாசன் விருதும் வழங்கப்பட்டன.

 

இவ்விருதுகளை  - விழா மேடையில்  திராவிடர் கழகத்  தலைவர் கி.வீரமணி விருதாளர்களுக்கு வழங்கி கவுரவித்தார்,

 

இதே  மேடையில் - ஆச்சி மசாலா மேலாண்மை இயக்குநர் பத்மசிங் அய்சக், பேராசிரியர் உ.நர்மதா, நவீன தமிழ் எழுத்தாளர் கவுதம சித்தார்த்தன் ஆகியோரும்  பாராட்டப்பட்டனர்.

 

இந்த விருது விழாவில் - கலி பூங்குன்றன், வழக்கறிஞர் அருள்மொழி, கோ.ஒளிவண்ணன், முனைவர் சி.தமிழ்ச்செல்வன் ஆகியோர் விருதாளர்களை வாழ்த்தி பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x