குமரியில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி- தலைவர்கள் முற்றுகையால் சூடுபிடிக்கும் தேர்தல் களம்

குமரியில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி- தலைவர்கள் முற்றுகையால் 
சூடுபிடிக்கும் தேர்தல் களம்
Updated on
2 min read

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் - காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவருக்கும் ஆதரவு திரட்ட முக்கிய தலைவர்கள் வந்த வண்ணம் இருப்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தொகுதிகளில் ஒன்று கன்னி யாகுமரி. 14.77 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதியில் கடந்த 2014 மக்க ளவைத் தேர்தலில் பொன். ராதாகிருஷ்ணன் 3.73 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஹெச்.வசந்தகுமார் 2.44 லட்சம் வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்தார்.

நடக்க உள்ள மக்களவைத் தேர்தலில் இவர்கள் இருவரும் மீண்டும் களம் இறங்கி யுள்ளதால் கடும் போட்டி நிலவுகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே கன்னி யாகுமரியில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பிரச்சா ரத்தை தொடங்கினர்.

தொடர்ந்து, பொன். ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரேமலதா ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்.

வசந்தகுமாரை ஆதரித்து தமிழக காங்கி ரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடந்த 2 நாட்க ளாக ஆதரவு திரட்டினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் வசந்தகுமாரை ஆதரித்து இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகின் றனர்.

பொன். ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் அதிமுக, தேமுதிக நிர்வாகிகளும், வசந்தகுமாருக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விஜயதரணி, பிரின்ஸ், ராஜேஷ்குமார் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோதங்கராஜ் ஆகியோரும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

வர்த்தக துறைமுகத்துக்கான ஆதரவு - எதிர்ப்பு வாக்குகள், இத்தொகுதியில் வெற்றி - தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய காரணியாக விளங்கும் என்று கருதப்படு கிறது.

வர்த்தக துறைமுகமே லட்சியம்

குமரியின் மேற்கு மாவட்டமான கிள்ளி யூர், கருங்கல் பகுதியில் பொன் ராதா கிருஷ்ணன் நேற்று வாக்கு சேகரித்தார்.

அவர் பேசும்போது, ‘‘கன்னியாகுமரியில் வர்த்தக துறைமுகம் அமைப்பதே என் லட்சியம். இதன்மூலம் பல்லாயிரம் இளைஞர் கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். ஏற்கெ னவே பார்வதிபுரம், மார்த்தாண்டம் மேம் பாலம், நான்குவழிச் சாலை என ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. மத்தியில் மீண்டும் மோடி அரசு அமைந்தால் மேலும் பல வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவேன்’’ என்றார்.

ராகுல்காந்தியின் நல்ல திட்டங்கள்

நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்வசந்தகுமார் நேற்று பிரச்சாரம் செய்தார்.

அவர் பேசும்போது, ‘‘ஏழைகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் உட்பட ராகுல்காந்தி அறிவித்துள்ள பல நல்ல திட்டங்கள் கிடைக்க காங்கிரஸுக்கு வாக்களி யுங்கள். கடந்த 3 ஆண்டுகளில் நாங்குனேரி தொகுதியில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் குளங்களை தூர்வாரியுள் ளேன். எனது ஊதியம் மூலம் ஏழை மாணவர் களுக்கு உதவி செய்து வருகிறேன்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in