Published : 20 Apr 2019 11:54 AM
Last Updated : 20 Apr 2019 11:54 AM

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 புலிக்குட்டிகள் பார்வைக்கு அனுமதி: வாடிக்கையாளர்களைக் கவர பூங்கா கடை திறப்பு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிறந்த மூன்று மாதமான 2 கருப்பு மற்றும் ஒரு வெள்ளை நிற புலிக்குட்டிகள் தனி விலங்கு கூடத்திடலில் விடப்பட்டுள்ளது. பார்வையாளர்களைக் கவர பூங்கா கடையும் திறக்கப்பட்டுள்ளது.

கோடை காலம் மற்றும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை நேரத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அதிக அளவில் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி உயிரியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நம்ருதா என்ற வெள்ளைப் புலிக்கும் நகுலா என்ற ஆண் புலிக்கும் (வெள்ளை மரபணு உடைய) கடந்த 2019 ஜனவரி மாதம் 9-ம் தேதி 3 குட்டிகள் பிறந்தன. அதில் இரண்டு குட்டிகள் அடர் வரிகளைப் பெற்று, அதிக கருமை நிறத்தில் காணப்பட்டன.

கரும்புலிகள் மிகவும் அரியது. மேலும் அது ஒரு தனி இனமோ அல்லது வேறு வகையோ அல்ல. பொதுவாக பாலூட்டிகளில், அகௌடி (Agouti) எனும் நிறமி ஜீன் அல்லாத ஜீன் திடீர் மாற்றத்தால் வருகிறது. இவற்றை மீறியதை கருமை (அ) கருமை நிறப்புலிகள் என்று அழைக்கிறார்கள்.

இவை போலியான கருமை நிறமாகும். பொய்யான கருமைப் புலிகள் அடர் கருமை வரிகள் ஒன்றுக்கொன்று மிக அருகில் அமைந்து அதன் பழுப்புநிற மஞ்சள் அடித்தளம் நமக்கு சிறியதாக மட்டுமே தெரியும். இன்னொரு பெண் குட்டி அதன் தாயைப்போல் வெண்ணிறத்தில் உள்ளது.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பிறந்த மூன்று மாதமான 2 கருப்பு மற்றும் ஒரு வெள்ளைநிற புலிக்குட்டிகளை அதன் தாயான நம்ருதாவுடன் தனி விலங்கு கூடத்திடல் விடப்பட்டுள்ளது. இக்குட்டிகளுடன் சேர்த்து புலிகளின் எண்ணிக்கை 28 ஆக பூங்காவில் அதிகரித்துள்ளது.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இந்தக் கோடைக் காலத்தை சிறப்பாக கழிக்க பார்வையாளர்களுக்காக சில புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 'பூங்காக் கடை' ஒன்றைத் திறந்து அதில் விலங்குகளின் படங்கள் பொறித்து நினைவுப் பொருட்கள், சாவிக்கொத்து, குல்லா, பனியன்கள், பொம்மைகள் முதலான பொருட்கள் பார்வையாளர்கள் வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெகுவிரைவில் இக்கடையில் விலங்கு சார்ந்த நிறைய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளன. முப்பரிமாண படக்காட்சியான வன உலாவிடம் (Jungle Safari) / கடல் நீரடிக் காட்சிகள் பூங்காவில் தொடங்கப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதை ஏராளமான பார்வையாளர்கள் கண்டுகளித்து தங்களது வருகையை மறக்க முடியாத அனுபவமாக மாறியுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x