Published : 11 Mar 2019 12:34 PM
Last Updated : 11 Mar 2019 12:34 PM

ஏழை மக்கள் பலன் பெறவே பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி

ஏழை மக்கள் எல்லா பலனும் பெற வேண்டும் என்ற லட்சியத்துடன் அமைக்கப்பட்டதுதான் அதிமுக-பாஜக கூட்டணி என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரி வித்தார்.

சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்று சுவாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:மத்திய அரசுடன் இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி 7 பேரை விடுதலை செய்ய அதிமுக அரசால் மட்டுமே முடியும். வைகோ தற்போது ஒரு சூழ்நிலைக் கைதியாக உள்ளார். எனவேதான் அவர் திமுகவை உயர்த்திப் பேசி வருகிறார். ஏழை மக்கள் எல்லா பலனும் பெற வேண்டும் என்ற லட்சியத்துடன் அமைக்கப்பட்டதுதான் அதிமுக- பாஜக கூட்டணி. தேர்தல் களத்தில் அதிமுக, திமுக இடையே தான் போட்டி. அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் தற்போது மீண்டும் கட்சியில் சேர்ந்து வருகிறார்கள் என்றார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அதிமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: மக்களவை மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் அதிமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். தீவிரவாதிகள் முகாம்களை அழித்து, தீவிரவாதத்துக்கு எதிராகப் போராடும் மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும். ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரை விடுதலை செய்வது குறித்து திமுக, காங்கிரஸ் கட்சிகள் நாடகமாடுகின்றன.

வரும் தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு இடையே மட்டும் இருமுனைப் போட்டி. டி.டி.வி.தினகரன் இந்தத் தேர்தலோடு காணாமல் போய்விடுவார். அதிமுக ஆலமரம் போன்றது, அதில் (கூட்டணியில் உள்ளவர்கள்) யார் வேண்டுமானாலும் பழம் பறிக்கலாம், சாப்பிடலாம், ஆனால் மரத்தை அழிக்க முடியாது. இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

கருணாநிதியின் தலைமைப் பண்பில் ஸ்டாலினை பொருத்திப் பார்க்க முடியுமா? - தொல்.திருமாவளவன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x