Published : 23 Sep 2014 10:26 AM
Last Updated : 23 Sep 2014 10:26 AM

தமிழக கோயில்களின் வழிகாட்டி புத்தகங்கள்

தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் கீழுள்ள கோயில்களின் வழிகாட்டி புத்தகங்கள் மாவட்ட வாரியாக வெளியிடப்பட உள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 30 ஆயிரத் துக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. இதில் 4 ஆயிரம் கோயில்களுக்கு மட்டுமே பக்தர்கள் அதிகளவில் செல் கிறார்கள். இந்நிலையில் மீதியுள்ள கோயில்களை பக்தர்கள் மத்தியில் பிரபலப்படுத்த அறநிலையத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நவக்கிரக கோயில்கள், தோஷ நிவர்த்தி கோயில்களை தேடிச் செல்லும் பக்தர்கள் மற்ற கோயில்களை கண்டு கொள்வதில்லை.

இதனால் பல சிறப்புவாய்ந்த கோயில்கள் கண்டுகொள்ளப்படாமல் உள்ளன. அவற்றை பிரபலப்படுத்தும் நோக்கில் மாவட்ட வாரியாக கோயில்களின் விவரம் அடங்கிய வழிகாட்டி புத்தகத்தை வெளியிடவுள்ளோம். இதற்கான அச்சுப்பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. தற்போது தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட கோயில்களுக்கான புத்தகங்கள் அச்சிட்டப்பட்டுள்ளன.

இந்த புத்தகங்களில் தொடர்புடைய மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களின் விவரமும் இருக்கும். அதில் இறைவன், இறைவியர் பெயர், கோயிலின் பழமை, வரலாறு, தல விருட்சம், நடை திறக்கும் நேரம், கோயில் நிர்வாகத்தின் தொடர்பு எண், போக்குவரத்து வசதி, தங்கும் வசதி, என அனைத்து அம்சங்களும் இடம்பெற்றிருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x