Published : 02 Mar 2019 08:08 AM
Last Updated : 02 Mar 2019 08:08 AM

தீவிரவாதிகளுக்கு வட்டியும் முதலுமாக தக்க பதிலடி கொடுப்போம்: கன்னியாகுமரியில் மத்திய அரசு திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி ஆவேசம்

அ.அருள்தாசன் / எல்.மோகன்

'ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு மக்கள் அளிக்கும் ஆதரவு அசாத் தியமானது. நாட்டில் பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும். தீவிர வாதிகளுக்கு வட்டியும் முதலு மாக அளிக்கப்படும்' என்று கன்னியாகுமரியில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாகத் தெரிவித்தார்.

தமிழகத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், திட்டங்களை தொடங்கி வைத்தும் பிரதமர் பேசியதாவது:

முன்பு எப்போதும் இல்லாத வகையில் நாடு தீவிரவாதத்தை எதிர்கொண்டிருக்கிறது. கடந்த 2004 முதல் 2014 வரை நாட்டின் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. தீவிரவாதத்துக்கு எதிரான துணிச்ச லான நடவடிக்கையை அப்போது மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அப்போதைய அரசு அதை செய்யவில்லை.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு ராணுவம் துணிச்சலான, துல்லிய மான தாக்குதலை நடத்தியிருக் கிறது. அவர்களுக்கு வணக்கம். தீவிரவாதத்தின் மீதான நடவடிக் கைகளுக்கு ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக நடக்கும் நிகழ்வுகள் ராணுவத்தின் வலி மையை காட்டுகின்றன. இது நாட்டை ஒற்றுமைப்படுத்தி உள்ளது.

ராணுவத்தின் நடவடிக்கை களுக்கு மக்கள் அளிக்கும் ஆதரவு அசாத்தியமானது. நாட்டில் பயங் கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும். தீவிரவாதிகளுக்கு வட்டியும் முதலுமாக அளிக்கப்படும்.

எதிர்க்கட்சிகளுக்கு கண்டனம்

பயங்கரவாதத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளில் சில அரசியல் கட்சிகள் வெறுப்பைக் காட்டுகின்றன. நாட்டு மக்களும், உலகமும் முழு ஆதரவை தெரிவித்துவரும் நிலையில், சில கட்சிகள் மத்திய அரசையும், ராணுவத்தின் செயல்பாட்டையும் சந்தேகிக்கின்றன. இது இந்தியாவை காயப்படுத்துகிறது. இவர்களின் நடவடிக்கைகளை பாகிஸ்தான் வானொலியில் மகிழ்ச்சியாக சொல்கிறார்கள். மோடி வரலாம் போகலாம், ஆனால் நாடு இருக்கும். முதலில் நாம் இந்தியர்கள். நாட்டின் பாதுகாப்பு தான் முக்கியம். உங்கள் அரசியலுக் காக, உங்கள் கட்சியை பலப்படுத் துவதற்காக நாட்டை பலவீனப் படுத்தாதீர்கள்.

ஊழல் இல்லை

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ஊழல் இல்லை. ஆனால், முந்தைய ஆட்சியில் ஊழலே பலரது வாழ்க்கையாக இருந்தது. தமிழகத்தில் கடந்த மக்களவைத் தேர்தலின்போது மறுவாக்கு எண்ணிக்கைக்கு புகழ்பெற்ற முன்னாள் மத்திய அமைச்சர், நடுத்தர வர்க்கத்தினரை மோசமாக பேசியிருந்தார். தற்போது, தனது குடும்பத்துக்கு ஜாமீன் பெறுவதற் காக நீதிமன்றங்களுக்கு அலைந்து கொண்டிருக்கிறார். ஊழல் செய்தவர்கள் தப்பிக்க முடியாது.

முதலிடத்தில் தமிழகம்

உலகளவில் தொழில் செய்வ தற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் 142-வது இடத்தில் இருந்த இந்தியாவை 77-வது இடத்துக்கு கொண்டுவந்துள்ளோம். சிறு, குறு தொழில்கள் மேம்பாட்டுக்கு உதவுகிறோம். 59 நிமிடத்தில் ரூ.1 கோடி கடன் பெறமுடியும். முத்ரா திட்டத்தில் 15 கோடி பேருக்கு ரூ.7 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. தலித் மக்களுக்கு ஆதரவாக எஸ்சி, எஸ்டி சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளோம்.

மக்களவைத் தேர்தலில் நாங்கள் பலம், ஸ்திரத்தன்மையின் பக்கம் இருக்கிறோம். அவர் கள் பலவீனத்தின் பக்கம் இருக் கிறார்கள்.

பொருளாதாரத்தில் வளர்ச்சி

ரயில்வே, சாலை திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன். மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் சென்னை ஐசிஎப்பில் உருவாக் கப்பட்ட தேஜஸ் அதிவேக ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 1964-ல் புயலில் சேதமடைந்த ராமேசுவரம்- தனுஷ்கோடி ரயில்வே வழித்தடத்தில் பாம்பன் ரயில்வே பாலம் கட்டப்படவுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக இதை புதுப்பிக்க யாரும் முன்வரவில்லை. உலகின் மிகப்பெரிய `ஆயுஷ்மான் பாரத்’ என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறோம்.

மீனவர்களுக்கான திட்டங்கள்

விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை தொடங்கியிருக்கிறோம். 24 நாட்களில் 1.10 கோடி விவசாயி களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. துணிச்சலான, கடுமையான முடிவு களை எடுக்கும், அறுதிபெரும் பான்மையுள்ள அரசையே மக்கள் விரும்புகிறார்கள். குடும்ப அரசி யலை, வாக்கு வங்கி அரசியலை மக்கள் விரும்பவில்லை.

மீனவர்களுக்கான பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி யிருக்கிறது. மீனவர்களுக்கென்று தனித்துறையை உருவாக்கி இருக் கிறோம். விவசாய கடன் அட்டை திட்டம் மீனவர்களுக்கும், பெண் களுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது.

வானிலை அறிவிப்புகளை உள்ளூர் மொழியிலேயே அறியும் ஜிபிஎஸ் சாதனங்கள் மீனவர் களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் முகையூரிலும், பூம்பு காரிலும் மீன்பிடி துறைமுக திட் டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

தமிழக மீனவர்கள் மீட்பு

கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து இதுவரை இலங்கையிலிருந்த நமது மீனவர்கள் 1,900 பேர் மீட்கப்பட்டிருக்கிறார்கள். அதிக துறைமுகங்களை உருவாக்கவும், இருக்கும் துறைமுகங்களை மேம் படுத்தவும் சாகர் மாலா திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. எனக்கு குடும்பம் இல்லை. இந்தியாவிலுள்ள 130 கோடி மக்கள்தான் எனது குடும்பம். அவர்களுக்காகவே வாழ்வேன் அல்லது வீழ்வேன். இந்தியாவின் வளத்துக்காக, வளர்ச்சிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதற்கு உங்களிடம் ஆசியையும், ஆதரவையும் கேட்டு வந்துள்ளேன். ஏழைகளின் கனவை நனவாக்குவேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.

விழாவில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், விஜயகுமார் எம்பி, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் பங்கேற்றனர்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x