Published : 30 Apr 2014 12:00 PM
Last Updated : 30 Apr 2014 12:00 PM

சைபர் குற்றங்களைத் தடுக்க இணையதளங்களில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்: ஆளுநர் ரோசய்யா பேச்சு

சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க இணையதளங்களில் பாதுகாப்பு முறையை வலுப்படுத்த வேண்டும் என்று ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.

சைபர் சொசைட்டி ஆப் இந்தியா வின் 10வது ஆண்டு விழா மற்றும் ‘சைபர் கிரைம் மற்றும் இணையதள பாதுகாப்பு’ தொடர்பான கருத்தரங் கம் சென்னை தி.நகரில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆளுநர் ரோசய்யா பேசிய தாவது:

மக்களிடையே தொழில்நுட்பம் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து துறைகளிலும் கணினி பயன்பாடுகள் அதிகரித்துள்ளன. இணையதள பயன்பாடு அதிகரித்து வருவது வரவேற்கத்தக்கது. ஆனால், இணையதளங்கள், வங்கிக் கணக்குகள், கிரெடிட் கார்டு உள்ளிட்டவைகளின் தகவல் களைத் திருடுவதும், அவற்றை தவறான வழியில் பயன்படுத்து வதும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் 42 மில்லியன் சைபர் குற்றங்கள் நடப்பதாக ஆய்வில் தெரியவந் துள்ளது. நிமிடத்துக்கு 80 பேர் சைபர் கிரைம்களால் பாதிக்கப் படுகின்றனர்.

கடந்த 2011-ல் 13,300 இணைய தளங்களிலும், 2012-ல் 22,000 இணையதளங்களிலும் புகுந்து தகவல்களை திருடவும், இணைய தள செயல்பாடுகளை முடக்கவும் செய்துள்ளனர். எனவே, இணைய தள குற்றங்களை தடுக்க பாது காப்பை வலுப்படுத்த வேண்டும். மக்களிடமும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிபிஐ முன்னாள் இயக்குநர் டாக்டர் ஆர்.கே.ராகவன் பேசுகை யில், “இனி வரும் காலங்களில் சைபர் கிரைம் மேலும், அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கணினி, செல்போன் உள்ளிட்ட வற்றின் பயன்பாடுகள் அதிகரித் துள்ளதே இதற்கு காரணம். எனவே, சைபர் கிரைம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மேலும், சைபர் கிரைம்களை கண்டுபிடிப்பது தொடர்பாக போலீ ஸாருக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்தவர்களை சைபர் சொசைட்டி ஆப் இந்தியாவின் தலைவர் வி.ராஜேந்திரன் வரவேற்றார்.

சுஜாதாவுக்கு பத்மபூஷண் விருது வழங்கவேண்டும்

இந்நிகழ்ச்சியில் மத்திய லஞ்ச ஒழிப்புதுறை முன்னாள் ஆணையர் என்.விட்டல் பேசுகையில், “உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா விளங்குகிறது. இணைய தளத்தை பயன்படுத்துவதில் நடந்து முடிந்துள்ள தேர்தல் பெரும் பங்கை வகித்துள்ளது.

வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்யவும், தேர்வு முடிவுகளை வெளியிடவும் ‘மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை’ கண்டுபிடித்த பெருமை பொறியாளரும், எழுத் தாளருமான சுஜாதாவை சாரும். எந்தவித தில்லுமுல்லும் செய்ய முடியாத அளவுக்கு இவை உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, சுஜாதாவுக்கு பத்மபூஷண் விருது கொடுத்து கவுரவிக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x