Published : 28 Mar 2019 01:48 PM
Last Updated : 28 Mar 2019 01:48 PM

அமமுக சின்னம் ஒதுக்கும் விவகாரம்: தமிழக தேர்தல் அதிகாரி பேட்டி

அமமுக தேர்தல் சின்னம் என்ன என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பேட்டிஅளித்தார்.

“நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மொத்த வேட்பு மனு தாக்கல் 1587 பேர். மனு தள்ளுபடி செய்யப்பட்டவர்கள்  643 பேர், மனு ஏற்கப்பட்டவர்கள்  932 பேர்.

18 சட்டமன்ற இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட மொத்த வேட்பு மனுக்கள் 518. மனு தள்ளுபடி செய்யப்பட்டது 205 பேர். மனு ஏற்கப்பட்டது 313 பேர்.

அதிகப்பட்ச வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி கரூர்- 43 பேர். அடுத்து தென் சென்னையில் தொகுதியில்  42 பேர் போட்டியிடுகின்றனர்.  குறைவான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி நீலகிரி 10 பேர்.

சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரம்பூரில் அதிகபட்சமாக 51 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், குறைந்த அளவாக குடியாத்தம் தொகுதியில் 8 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தமிழகம் முழுதும் பறக்கும்படை சோதனையில் இதுவரை 50.70 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கம் 223.5 கிலோவும், வெள்ளி 346.7 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.69 கோடி ஆகும்.

இதுவரை தேர்தல் விதிகளை மீறியதாக மொத்தம் 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 3 வகையான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தேர்தல் பிரநிதித்துவ சட்டம், ஐபிசி 171 மற்றும் மோட்டார் வாகனச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் கட்சி வாரியாக அதிகபட்சமாக திமுக மீது 10 வழக்குகள், அதிமுக-9, பாஜக-2, பாமக 3, மக்கள் நீதி மய்யம்-3, சுயேச்சைகள்-7 என 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் சின்னம் நாளை 3 மணிக்கு வேட்புமனு வாபஸ் முடிந்து இறுதிப்பட்டியல் வெளியான பின் சின்னம் குறித்து நடைமுறை எடுத்துக்கொள்ளப்படும். சின்னம் தேர்தல் ஆணையமே பொதுச்சின்னம் குறித்து முடிவெடுக்கப்படும்.

அமமுக இதுவரை சுயேச்சைகளாகத்தான் கருதப்படுவார்கள். அவர்கள் யார் யார் தங்கள் வேட்பாளர்கள் என பட்டியல் கொடுக்கவேண்டும். அதை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும். உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் என்னவென்றால் அவர்களுக்கு ஒரு பொதுச்சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்பதே. ஆகவே சின்னம் குறித்து தேர்தல் ஆணையமே முடிவு செய்யும்.

சாதாரண மக்கள் கொண்டுச்செல்லும் பணத்தை பறிமுதல் செய்யப்படுவது குறித்த கேள்விக்கு, ஏற்கெனவே தேர்தல் ஆணைய வழிகாட்டுதல் 50 ஆயிரம் வரை எடுத்துச் செல்லலாம் என்று கூறுகிறது, அதற்கு கீழ் கொண்டுச்சென்றால் பிரச்சினை இல்லை”

இவ்வாறு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x