

சென்னை: சென்னை டாஸ்மாக் பொதுமேலாளர் உட்பட தமிழகம் முழுவதும் 16 மாவட்ட வருவாய் அலுவலர்கள் (டிஆர்ஓ) திடீர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக தலைமைச் செயலர் எம்.சாய்குமார் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் மாவட்ட வருவாய் அலுவலராக (நில எடுப்பு) பணியாற்றும் பி.சைலேந்திரன் மாற்றப்பட்டு, சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்படுகிறார்.
சென்னை மாநகராட்சி உதவி ஆணையர் (பொது நிர்வாகம் மற்றும் பணியாளர் பிரிவு) உமாமகேஸ்வரி ராமச்சந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டு, நில நிர்வாக இணை ஆணையராக பணியமர்த்தப்படுகிறார்.
விழுப்புரத்தில் நெடுஞ்சாலை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக (நில எடுப்பு) பணியாற்றும் டி.அம்பயிரானந்தன் மாற்றப்பட்டு சென்னை விமான நிலைய விரிவாக்க திட்ட சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக (நில எடுப்பு) பணியமர்த்தப்படுகிறார்.
சென்னையில் தமிழ்நாடு சுகாதார முறை திட்ட மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரியும் கே.மணிகண்டன் இடமாற்றம் செய்யப்பட்டு, விழுப்புரம் நெடுஞ்சாலை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக (நில எடுப்பு) பணியமர்த்தப்படுகிறார்.
சென்னையில் மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநராக பணியாற்றிய எஸ்.பானு, தமிழ்நாடு சுகாதார முறை திட்ட மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்படுகிறார்.
செய்யாறு சிப்காட் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக (நில எடுப்பு) பணிபுரிந்து வரும் வி.விமல்குமார், சென்னையில் சமூகநீதித் துறையின் மாநில ஆய்வுக்குழு உறுப்பினர்-செயலராக பணியமர்த்தப்படுகிறார்.
சென்னையில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக பொது மேலாளராக (வணிகம்) பணியாற்றும் எஸ்.சிவராம்திருச்சி ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணையராக நியமிக்கப்படுகிறார்.
சென்னையில் டாஸ்மாக் பொது மேலாளராக (விற்பனை) பணிபுரியும் டி.முத்துராமலிங்கம் மாற்றப்பட்டு, சென்னை மாநகராட்சி மாவட்ட வருவாய் அலுவலராக (நிலம் மற்றும் எஸ்டேட்) நியமிக்கப்படுகிறார். இவ்வாறு 16 பேர் மாற்றப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.