

ஊழல் பணத்தை காப்பாற்றுவதற்காகவே அதிமுக அமைச்சர்கள் மோடியை டாடி என்கின்றனர் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் சஞ்சய் தத் நெல்லையில் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் சஞ்சய் தத் திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
வரும் நாடாளுமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பது உறுதி.
பிரதமர் மோடியை தமிழக அதிமுக அமைச்சர்கள் டாடி என்கின்றனர். ஊழல் பணத்தையெல்லாம் காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்பதுதான் அதிமுக அமைச்சர்களின் ஒரே எண்ணம். அந்த ஊழல் பணத்தைக் காப்பாற்றுவதற்காகவே, மோடியை இவர்கள் டாடி என்று சொல்லுகின்றனர்.
நாகர்கோவிலில் வரும் 13ம் தேதி மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின் அனைத்து தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.
இவ்வாறு சஞ்சய் தத் தெரிவித்தார்.