Published : 11 Mar 2019 09:39 AM
Last Updated : 11 Mar 2019 09:39 AM

பிரேமலதாவின் தரக்குறைவான விமர்சனம் அரசியலுக்கு ஏற்றதல்ல: நாராயணசாமி

பிரேமலதாவின் தரக்குறைவு விமர்சனம் அரசியலுக்கு ஏற்றதல்ல. தரம் தாழ்ந்து பேசி, தான் ஒரு தரம் தாழ்ந்த அரசியல்வாதி என காட்டியுள்ளதாக புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு முதலில் மரண தண்டனையும், பிறகு ஆயுள் தண்டனையும் கொடுக்கப்பட்டது. அவர்கள் பல ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் அவர்களை மன்னிப்பதாக கூறிவிட்டனர். மேலும் பிரியங்கா தனிப்பட்ட முறையில் நளினியை சிறையில் சென்று சந்தித்தார். எங்களை பொறுத்தவரை தனிப்

பட்ட முறையில் அவர்களை விடுவிக்கக் கூடாது என்ற எண்ணம் இருந்தாலும், விடுதலை செய்யலாம் என தலைவர் ராகுல் கூறியுள்ளார். தற்போது விடுதலை தொடர்பான கோப்பை தமிழக ஆளுநர் வைத்திருப்பது சரியல்ல.

தேமுதிக ஒரே சமயத்தில் திமுகவிடமும், அதிமுகவிடமும் கூட்டணி பேசியது. ஆனால் பேரம் எடுபடவில்லை. திமுக கதவை மூடிவிட்டதாக கூறியது. உடனே அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திமுகவை தரக்குறைவாக பேசியுள்ளனர். அரசியலில் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது. கொள்கை அளவில்தான் விமர்சனம் செய்ய வேண்டும். பிரேமலதா திமுகவை தரக்குறைவாக விமர்சிப்பது அரசியலுக்கு ஏற்றதல்ல. பிரேமலதா தரம் தாழ்ந்து பேசியதால், தான் ஒரு தரம் தாழ்ந்த அரசியல்வாதி என்பதை வெளிப்படுத்தியுள்ளார் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x