

பெரம்பலூர் அருகே சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச் சூர் கிராமத்தைச் சேர்ந்த கலியன் (60), காவேரியம்மாள்(55), பரமேஸ் வரி(35), மருதாம்பாள்(55), சோலை யம்மாள்(60) உள்ளிட்டோர் நேற்று அதிகாலை திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத் திரையாக புறப்பட்டுச் சென்றனர்.
பாடாலூர் அருகே திருவளக் குறிச்சி ஆஞ்சநேயர் கோயில் பகுதி யில் சென்றபோது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற ஒரு கார் நிலை தடுமாறி பக்தர் களின் மீது மோதிவிட்டு, சாலையின் மையத்தடுப்பில் மோதி நின்றது. இதில், கலியன், பரமேஸ்வரி, காவேரியம்மாள் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
சோலையம்மாள், மருதாம்பாள் ஆகியோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து பாடாலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
விளாத்திகுளத்தில் 3 பேர் மரணம்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்தி குளம் புதூர் அருகே உள்ள முத்து சாமிபுரத்தைச் சேர்ந்த மக்கள், மதுரை பாண்டி கோயிலுக்கு சுமை வாகனத்தில் நேற்று காலை புறப்பட்டுச் சென்ற னர். வாகனத்தை முத்துசாமிபுரத் தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி(50) என்பவர் ஓட்டினார். முத்துசாமிபுரம் அருகே உள்ள சென்னமரெட்டிபட்டி பகுதியில் சென்றபோது, சாலை நடுவே துவரம் பருப்பு காய வைத் துக் கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த பெருமாள் மனைவி சண்முக லட்சுமி(55) சுமை வாகனத்தை பார்த்து தடுமாறியுள்ளார்.
அப்போது சுமை வாகனம் சண் முகலட்சுமி மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சண்முகலட்சுமி, முத்துசாமிபுரத்தைச் சேர்ந்த ராமசாமி மனைவி ராமலட்சுமி(52), செண்பகம்(50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வெள்ளைச்சாமி உட்பட 15 பேர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.