

குடும்ப வாழ்க்கை முறையை ஊக்குவிக்க வேண்டும் என்று ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கூறியுள்ளார். மனச்சிதைவு நோய் தொடர்பான 6-வது சர்வதேச திரைப்பட விழா சென்னை ரஷ்யன் கலாச்சார மையத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடந்தது. இந்த திரைப்பட விழாவில் மனநலம் சார்ந்த குறும்பட போட்டி நடத்தப்பட்டது. 48 குறும்படங்கள் திரையிடப்பட்ட இப்போட்டியில் கடலூரைச் சேர்ந்த ஆதித்யா இயக்கிய ‘ஸ்கிரிப்லிங்’ மற்றும் புனேவைச் சேர்ந்த ரோனி ஜார்ஜ் இயக்கிய ‘ஃபுரூட்புல்’ ஆகிய குறும்படங்களுக்கு முதல் பரிசு கிடைத்தது. ‘விடியல்’ என்னும் குறும்படத்திற்கு 2-ம் பரிசும், ‘பீட் இல்னெஸ்’ படத்திற்கு மூன்றாம் பரிசு வழங்கப்பட்டது.
வெற்றிபெற்ற குறும்பட இயக்கு நர்களுக்கு ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், விருதுகளை வழங்கி னார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
இந்தியா போன்ற நாடுகளில் குடும்பத்தோடு இணைந்த வாழ்க்கை நிலை மிகவும் அவசியமாகும். இன்றைக்கு குடும்ப வாழ்க்கை முறை சிதைந்துகொண்டே வருகிறது. இதைத் தடுக்க வேண்டும். ஃபேஸ்புக், ட்விட்டர் என்று எவ்வளவோ சமூக வலைதளங்கள் வந்துவிட்டாலும் உணர்வுப்பூர்வமான தொடர்புகளை அதில் சாத்தியப்படுத்துவது கடின மான விஷயம்.
சாதிக்கத் துடிக்கும் மனிதர்க ளுக்கு குடும்பத்தின் ஒத்துழைப்பு கிடைத்தால் நினைத்த இலக்கை எளிதில் அடைய முடியும். சிறு வயதில் எனக்கு படிப்பு சரியாக வரவில்லை, உடனே எனக்கு எதில் ஆர்வம் என்பதை கவனித்த எனது தாயார், என்னை அந்த துறையில் ஊக்குவித்தார். அதனால் தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
‘பிரேம் ஆஃப் மைன்ட்’ குறும்பட போட்டியின் தலைமை நடுவர் மிட்செல் வெசிஸ், சுந்தரம் நிதி நிறுவனத்தின் கார்ப்ப ரேட் தொடர்பு தலைவர் சந்தியா குமார், மனச்சிதைவு மைய ஒருங்கிணைப்பாளர் மங்களா உட்பட பலர் கலந்துகொண்டனர்.