ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து காத்திருப்பு போராட்டம்: 7 பேர் கைது 

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து காத்திருப்பு போராட்டம்: 7 பேர் கைது 
Updated on
1 min read

வேதாரண்யம் அருகே ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீஸார் கைது செய்தனர். இதைக் கண்டித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருகாரவாசல் முதல் நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் கரியாப்பட்டினத்தில் ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு குழுவினர் கடந்த 3-ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கரியாப்பட்டினம், செட்டிப்புலம் உட்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.

8-வது நாளாக நேற்று போராட்டம் தொடர்ந்தது. அப்போது அங்கு வந்த கரியாப்பட்டினம் போலீஸார், அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி  பந்தலை அகற்றினர்.  மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சரவணமுத்து உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். இதைக் கண்டித்து, நூற்றுக்கணக்கான பெண்கள், அய்யனார் கோயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in