நாடு சுதந்திரம் அடைஞ்சதுலேர்ந்து ஓட்டு போடாம இருந்ததே இல்ல!- சிவங்கையின் சீனியர் வாக்காளர்

நாடு சுதந்திரம் அடைஞ்சதுலேர்ந்து ஓட்டு போடாம இருந்ததே இல்ல!- சிவங்கையின்
 சீனியர் வாக்காளர்
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 105 வயது முதியவர் தொடர்ந்து 17-வது மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கத் தயாராகி வருகிறார். இவர் சிவகங்கை மக்களவைத் தொகுதியின் மூத்த வாக்காளராக உள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராயவரத்தை சேர்ந்தவர் பழனியப்பச் செட்டியார். இவர் 1914-ம் ஆண்டு டிசம்பர் 19-ல் பிறந்தவர். 105 வயதாகும் இவர், தேயிலைத் தோட்ட அதிபராக உள்ளார். கோயில் திருப்பணி

கள், ஏழை மாணவர்களுக்கு உதவித் தொகை போன்ற சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அப்பகுதியில் ரூ.2 கோடிக்கு பள்ளிக் கட்டிடம் கட்டிக் கொடுத்துள்ளார்.

இவர் வசிக்கும் திருமயம் சட்டப்பேரவைத் தொகுதி சிவகங்கை மக்களவைத் தொகுதிக்குள் வருகிறது. இவரது தங்கை கணவர் பழனியப்பன், திருமயம் தொகுதியின் முதல் எம்எல்ஏவாக இருந்துள்ளார். தனது அனுபவம் குறித்து பழனியப்பச் செட்டியார் கூறியதாவது:

எளிய உணவு, தினமும் நடைபயிற்சி செய்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துள்ளேன். அமெரிக்கா, பர்மா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளுக்குச் சென்று வந்துள்ளேன். 100 வயதிலும் அமெரிக்காவுக்கு தனியாக சென்று வந்துள்ளேன்.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் 15 சட்டப்பேரவை தேர்தல்கள், 16 மக்களவைத் தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்கள் என 50-க்கும் மேற்பட்ட தேர்தல்களில் வாக்களித்துள்ளேன்.  17-வது மக்களவைத் தேர்தலிலும் கட்டாயம் வாக்களிப்பேன். இதுவரை வாக்களிக்காமல் இருந்ததே இல்லை. சிவகங்கை தொகுதியின் மூத்த வாக்காளர் என்பதில் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in