

நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக், திமுக கூட்டணியில் அடங்கியுள்ள கட்சிகள் நேரடியாக மோதும் இடங்கள் பற்றிய ஒரு பார்வை.
அதிமுகவும் திமுகவும் நாடாளுமான்ற தேர்தலை ஒட்டி கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதில் அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக, பாஜக, தமாகா, என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள், ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில் இரண்டு கூட்டணிக்கட்சிகளும் போட்டியிடும் இடங்களில் நேரடியாக மோதும் இடங்கள் வருமாறு:
திமுக -அதிமுக நேரடியாக மோதும் இடங்கள்
1. தென் சென்னை 2.காஞ்சிபுரம், 3. திருவண்ணாமலை, 4.சேலம், 5. நீலகிரி, 6. பொள்ளாச்சி, 7. மயிலாடுதுறை, 8. நெல்லை ஆகிய 8 தொகுதிகளில் மோதுகின்றனர்.
திமுக -பாமக நேரடியாக மோதும் தொகுதிகள்:
1.மத்திய சென்னை, 2.ஸ்ரீபெரும்புதூர், 3.தருமபுரி, 4.கடலூர், 5. அரக்கோணம்
திமுக - தேமுதிக நேரடியாக மோதும் தொகுதிகள்:
1.வடசென்னை, 2.கள்ளக்குறிச்சி
திமுக - பாஜக தூத்துக்குடியில் நேரடியாக மோதுகிறது.
திமுகவுடன் மோதும் மற்ற கூட்டணிக்கட்சிகள்:
திமுக-புதிய நீதிக்கட்சி 1.வேலூர் தொகுதி
திமுக-புதிய தமிழகம் கட்சி 1. தென்காசி தொகுதி
திமுக-தமிழ் மாநில காங்கிரஸ் தஞ்சாவூர் தொகுதி
இதேபோன்று அதிமுக நேரடியாக மோதும் திமுக கூட்டணிக்கட்சிகள் விபரம் வருமாறு:
அதிமுக- காங்கிரஸ் கட்சிகள் 1.கிருஷ்ணகிரி, 2. திருவள்ளூர், 3. கரூர், 4. தேனி தொகுதியில் நேரடியாக மோதுகின்றனர்.
அதிமுகவும்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மதுரையில் நேரடியாக மோதுகின்றனர்.
அதிமுகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் திருப்பூர், நாகையில் நேரடியாக மோதுகின்றனர்.
அதிமுகவும் மதிமுகவும் ஈரோடு தொகுதியில் நேரடியாக மோதுகின்றனர்.
அதிமுகவும் விசிகவும் சிதம்பரம்(தனி) தொகுதியில் நேரடியாக மோதுகின்றனர்.
அதிமுகவும்-கொமதெக ஈஸ்வரனும் நாமக்கல் தொகுதியில் மோதுகின்றனர்.
அதிமுகவும்-ஐஜெகே கட்சியும் பெரம்பலூரில் நேரடியாக மோதுகின்றனர்.
அதிமுக அதிக அளவில் திமுக கூட்டணிக்கட்சிகளுடன் நேரடியாக மோதுகிறது.
விசிக- பாமக விழுப்புரம்(தனி) தொகுதியில் நேரடியாக மோதுகின்றனர்.
தேமுதிக - காங்கிரஸ் 1.திருச்சி, 2.விருதுநகர் தொகுதிகளில் நேரடியாக மோதுகிறது.
பாமக-காங்கிரஸுடன் ஆரணி தொகுதியில் நேரடியாக மோதுகிறது.
காங்கிரஸ் - பாஜக 1.சிவகங்கை, 2. கன்னியாகுமரி தொகுதியில் நேரடியாக மோதுகிறது.
பாஜக- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை தொகுதியில் நேரடியாக மோதுகிறது.
பாஜக - முஸ்லீம் லீக் ராமநாதபுரம் தொகுதியில் நேரடியாக மோதுகிறது.
காங்கிரஸும்-என்.ஆர்.காங்கிரஸும் புதுச்சேரி தொகுதியில் நேரடியாக மோதுகின்றன.