

பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு கடினமாக இருந்ததால் மாணவர்கள் கவலை அடைந்துள் ளனர்.
பள்ளிக்கல்வித் துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தில் மேல் நிலை வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ல் தொடங்கி 22-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து விடைத்தாள்களை மண்டலங்களுக்கு பிரித்து அனுப்பும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. இதற் கிடையே பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14-ம் தேதி தொடங்கியது. மொழிப் பாடம், ஆங்கிலம் பாடத்தேர்வுகள் முடிந்துள்ள நிலையில் முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் இப்போது நடைபெற்று வரு கின்றன.
இந்நிலையில் அறிவியல் பாடத் தேர்வு நேற்று நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3,731 தேர்வு மையங்களில் இருந்து 9.97 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். கடந்த மார்ச் 25-ம் தேதி நடைபெற்ற கணிதத் தேர்வை போல, அறிவியல் பாட வினாத்தாளும் கடினமாக இருந்ததால் மாணவ, மாணவிகள் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக 5 மற்றும் 2 மதிப்பெண் பகுதிகளில் பெரும்பாலான கேள் விகள் மறைமுகமாக கேட்கப் பட்டிருந்ததால் பதிலளிக்க மாணவர்கள் சிரமப்பட்டனர்.
இத்தகைய கடின வினாத் தாள்கள் காரணமாக நடப்பு ஆண்டு மாணவர் தேர்ச்சி விகிதம் சரியும். கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தேர்வுத் துறை தவிர்க்க வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டது.
இதற்கிடையே ஒட்டுமொத்த மாக 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை (மார்ச் 29) முடிவடைகின்றன. தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 2-வது வாரம் தொடங்கும். திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29 -ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.