Published : 22 Sep 2014 11:30 am

Updated : 22 Sep 2014 14:34 pm

 

Published : 22 Sep 2014 11:30 AM
Last Updated : 22 Sep 2014 02:34 PM

டிசிஎஸ் நிறுவனத்தில் ஒரு லட்சம் பெண் பணியாளர்கள்

சாஃப்ட்வேர் துறையில் ஈடுபட்டுள்ள டாடா குழுமத்தின் அங்கமான டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் (டிசிஎஸ்) பணியாற்றும் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொட்டுள்ளது.

பெண் பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்களில் முதலாவதாக டிசிஎஸ் திகழ்கிறது. இந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக் கையில் மூன்றில் ஒரு பங்கு பெண்களாவர்.

டிசிஎஸ் நிறுவனத்தில் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 3.06 லட்சமாகும். பெண்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு அளித்துள்ள நிறுவனமாக டிசிஎஸ் விளங்குகிறது.

சர்வதேச அளவில் அதிக எண்ணிக்கையிலான பெண் ஊழியர்கள் ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.

இந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 4.31 லட்சமாகும். இதில் பெண் பணியாளர்களின் எண்ணிக்கை 1.30 லட்சமாகும்.

டிசிஎஸ் நிறுவனத்துக்கு அடுத்தபடியாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 54,537 பெண் பணியாளர்களும், விப்ரோவில் 45,276 பெண் ஊழியர்களும் பணிபுரிகின்றனர். தகவல் தொழில்நுட்பம் (ஐடி) மற்றும் வெளிப்பணி ஒப்படைப்பு (பிபிஓ) அலுவல் பணிகளில் மொத்தம் 31 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இதில் 10 லட்சம் பேர் பெண்கள் என்று நாஸ்காம் வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

10 ஆண்டுகளுக்கு முன்பு பெண் ஊழியர்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக இருந்தது. இப்போது 10 மடங்கு அதிகரித்துள்ளதாக டிசிஎஸ் நிறுவனத்தின் தலைவர் என். சந்திரசேகரன் தெரிவித்தார். மொத்தமுள்ள பெண் பணியா ளர்களில் 40 சதவீதம் பேர் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட் டவர்கள் அல்லது ஜூனியர் நிலையிலான ஊழியர்களாவர். 11 சதவீதம் பேர் முதுநிலைப் பிரிவில் உள்ளனர்.


சாஃப்ட்வேர் துறைடாடா குழுமம்டிசிஎஸ்பெண் ஊழியர்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

More From this Author