விரைவில் குக்கர் சின்னம் கிடைக்கும்: டிடிவி தினகரன் பேட்டி

விரைவில் குக்கர் சின்னம் கிடைக்கும்: டிடிவி தினகரன் பேட்டி
Updated on
1 min read

தங்கள் பக்கம் நியாயம் உள்ளது என்றும் விரைவில் குக்கர் சின்னம் தமது கட்சிக்கு ஒதுக்கப்படும் என்றும், வேட்பாளர்களை விரைவில் அறிவிக்க உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவினர் 95 சதவிகிதத்தினர் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர், எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்நாட்டு மக்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். அதைக்கண்டு எங்கள் எதிரிகளுக்கும், துரோகிகளும் சேர்ந்து அவர்களின் அரசியல் பலம் அரசாங்க பலத்தை வைத்து பல சிக்கல்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த தடைக்கற்கள் எங்களுக்கு உரமாக உள்ளது. இன்றுகூட பார்த்தால் உச்சநீதிமன்றத்தில் சின்னம் வழக்கை 27-ம் தேதி ஒத்தி வைத்துள்ளார்கள் நிச்சயம் எங்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்க உள்ளது.

தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்துக்கொண்டிருக்கிற அதிமுக, பாஜக அதேபோன்று தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்த திமுக அதன் கூட்டணிக்கட்சிகள் எல்லாமே எங்கள் எதிரிகள் வரும் தேர்தலில் அவைகளை ஜனநாயக முறைப்படி வீழ்த்துவதே எங்கள் முன் உள்ள குறிக்கோள்.

நீங்கள் எல்லாம் சொல்கிறீர்கள் அல்லவா பலமான கூட்டணி என்று. திமுக கூட்டணி பயில்வான் கூட்டணி, இது அன்புமணி வார்த்தையில் வெட்கங்கெட்ட கூட்டணி. இவ்வாறு அவர் பேசினார்.  

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in