சமச்சீர் பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வுகள் இன்றுடன் நிறைவு: விடைத்தாள் திருத்தம் நாளை தொடக்கம்

சமச்சீர் பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வுகள் இன்றுடன் நிறைவு: 
விடைத்தாள் திருத்தம் நாளை தொடக்கம்
Updated on
1 min read

பள்ளிக் கல்வித் துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தில் 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1-ல் தொடங்கி 22-ம் தேதியுடன் முடிந்துவிட்டன. இதற்கிடையே கடந்த மார்ச் 14-ம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்றுடன் முடிவடைகின்றன.

இறுதி நாளில் சமூக அறிவியல் தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 3,731 மையங்களில் இருந்து 9.97 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.

இந்நிலையில், பொதுத்தேர்வுகள் நிறைவு பெறுவதை அடுத்து விடைத்தாள்களை மண்டலங்களுக்கு பிரித்து அனுப்பும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை தொடங்கி (மார்ச் 30) ஏப்ரல் 11-ம் தேதி வரை நடைபெறுகின்றன. அதன்பின் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி ஏப்ரல் 19-ம் தேதி வெளியாகும்.

பத்தாம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கும். தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29-ம் தேதி வெளியிடப்படும். தொடர்ந்து பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 2-வது வாரம் தொடங்க உள்ளது. தேர்வு முடிவுகள் மே 8-ல் வெளியிடப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. மேலும், விடைத்தாள் திருத்துதலை ஆய்வு செய்யவும் பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in