சென்னையில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவுகிறதா?: தனியார் மருத்துவமனையில் ஒருவர் அனுமதி

சென்னையில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவுகிறதா?: தனியார் மருத்துவமனையில் ஒருவர் அனுமதி
Updated on
1 min read

சென்னையில் டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவத் தொடங்கியுள் ளதாக கூறப்பபடுகிறது. கோடம்பாக்கம் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்ட ஒருவர், தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்களின் உற்பத்தி அதிகரித் துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் வகையைச் சேர்ந்த கொசுக்களின் உற்பத்தியும் பெருகி வருகிறது.

இதனால், கட்டுக்குள் இருந்த டெங்கு காய்ச்சல், மீண்டும் சென்னையில் பரவத் தொடங்கியுள்ளது. கோடம்பாக் கம் டிரஸ்ட்புரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் டெங்கு காய்ச் சலால் பாதிக்கப்பட்டு, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடலில் ரத்த தட்டணுக்கள் குறைந்து வருவதால், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘கோடம் பாக்கம் பகுதியில் கொசுக்களின் உற்பத்தி அதிகமாக இருக்கிறது. மாநகராட்சி சுகாதாரத் துறையினர் கண்டுகொள்வ தில்லை. முறை யாக கொசு மருந்து அடிப்ப தில்லை. சில மாதங்களாக இல்லாமல் இருந்த டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக் கப்பட்ட ஒருவர் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் ஒரு குழந்தைக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பதாக சொல்கின் றனர். டெங்கு காய்ச்சலை கட்டுப் படுத்த, ஆரம்ப நிலையிலேயே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in