Published : 02 Mar 2019 08:33 AM
Last Updated : 02 Mar 2019 08:33 AM

ராகு காலம் முடிய காத்திருந்து விருப்ப மனு அளித்த திமுகவினர்: முதல் நாளில் 100-க்கும் மேற்பட்டோர் மனு

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட நேற்று 100-க் கும் அதிகமானோர் விருப்ப மனு அளித்தனர். ராகு காலம் முடியும் வரை காத்திருந்து பலர் விருப்ப மனு அளித்தனர்.

புதுச்சேரி உட்பட 40 மக்களவைத் தொகுதிகள், இடைத்தேர்தல் நடக்கவுள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் மார்ச் 1 முதல் 7-ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்திருந்தார். இதற்கான விருப்ப மனு விநியோகம் கடந்த 25-ம் தேதி தொடங்கியது. விருப்ப மனு கட்டணம் ரூ. 1,000 பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுவு டன் ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக் கப்பட்டிருந்தது.

முதல் நாளான நேற்று 100-க் கும் அதிகமானோர் விருப்ப மனு அளித்தனர். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை அலுவலகச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, கு.க.செல்வம், தலைமை அலுவலக மேலாளர்கள் ஜெயக்குமார், பத்மநாபன் ஆகியோரிடம் திமுகவினர் பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அளித்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிட அக்கட்சியின் மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் சரவணன் விருப்ப மனு அளித்தார். அதே நேரத்தில் மதுரை மக்களவைத் தொகுதி, திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடவும் டாக்டர் சரவணன் தனக்காக விருப்ப மனு அளித்துள்ளார். இவர் ஏற்கெனவே திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் சென்னை தொகுதிக்கு ஸ்டாலின் மகன் உதயநிதிக்காக திமுக பிரமுகர் சந்திரபாபு என்பவரும். அதே தொகுதிக்கு திமுக வர்த்தகர் அணிச் செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கமும் விருப்ப மனு அளித்துள்ளனர். காலை 10 முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டி ருந்தது. ஆனால், நேற்று காலை 10.30 முதல் பகல் 12 மணி வரை ராகு காலம் என்பதால் 12 மணி வரை திமுகவினர் யாரும் விருப்ப மனு அளிக்கவில்லை. ராகு காலம் முடியும்வரை காத்திருந்து அதன்பிறகே விருப்ப மனு அளித்தனர்.

வரும் 4-ம் தேதி முகூர்த்த நாள், 6-ம் தேதி அமாவாசை. எனவே, இந்த நாட்களில் அதிக அளவில் விருப்ப மனுக்களை கட்சியினர் அளிப்பார்கள் என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப் படும் தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் கட்டணம் திரும்ப அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படாததால் விருப்ப மனு அளிப்பது நேற்று குறைவாகவே இருந்தது.

பெயர், தற்போது வசிக்கும் தொகுதி, முகவரி, தொழில், கல்வி, கட்சிப் பொறுப்பு, இதுவரை வகித்த, வகிக்கும் பதவிகள், திமுக நடத்திய போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவரா, வேறு அரசியல் கட்சியில் இருந்து வந்தவரா, இதற்கு முன்பு தேர்த லில் பேட்டியிட்டுள்ளாரா என்பன உள்ளிட்ட விவரங்கள் விருப்ப மனுவில் கேட்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x