

தமிழகம் முழுவதும் நடந்த போலியோ சொட்டுமருந்து முகா மில் 66.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. விடுபட்ட குழந் தைகளுக்கு ஒரு வாரத்தில் சொட்டு மருந்து வழங்கப்படும் என்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் க.குழந்தைசாமி தெரிவித்தார்.
நாடுமுழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடந்தது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன் வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளி கள் என 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பயணத்தில் இருக்கும் குழந்தைகளின் வசதிக் காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலை யங்கள், சோதனைச் சாவடி கள் என 1,652 மையங்கள் அமைக் கப்பட்டிருந்தன. தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக 1,000 நடமாடும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
இவைதவிர 3 ஆயிரம் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரப் பணியாளர் கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார் வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர்.
முதல்வர் தொடங்கி வைத்தார்
சென்னை கிரீன்வேஸ் சாலை யில் உள்ள முதல்வர் பழனி சாமியின் இல்ல வளாகத்தில் செயல்படும் முகாம் அலுவலகத் தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடை பெற்றது. முதல்வர் பழனிசாமி, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.
அப்போது சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை (டிபிஎச்) இயக் குநர் க.குழந்தைசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.
தமிழகம் முழுவதும் காலை 7 மணிக்கு தொடங்கிய போலியோ சொட்டு மருந்து முகாம், மாலை 5 மணி வரை நடந்தது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆர்வமாக அழைத்து வந்து போலியோ சொட்டு மருந்து போட்டுச் சென் றனர். அழுத குழந்தைகளுக்கு சுகாதாரத் துறையினர் சாக்லேட் களை வழங்கினர். விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய வசதி யாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளின் இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்பட்டது.
போலியோ சொட்டுமருந்து முகாம் தொடர்பாக பொது சுகா தாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் க.குழந்தைசாமி கூறியதாவது:
நாடுமுழுவதும் போலியோவை (இளம் பிள்ளை வாதம்) ஒழிப் பதற்காக ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது.
இதனால், இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்குமாறு மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட 72 லட்சம் குழந்தைகள் உள்ளனர். இதில் 66.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப் பட்டுள்ளது.
இது 92 சதவீதமாகும். விடுபட்ட குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளலாம். கிராமப்புற செவிலியர்கள் வீடுவீடாக சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு ஒரு வாரத்தில் போலியோ சொட்டு மருந்தை வழங்குவார்கள் என்றார்.
சென்னையில் 5 வயதுக்குட்பட்ட 7.5 லட்சம் குழந்தைகள் உள்ள னர். இவர்களுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக 1,640 மையங்கள் ஏற்படுத் தப்பட்டிருந்தன. 6,700 பேர் பணி யில் ஈடுபட்டனர். முகாம் முடிவில் 6.73 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.