

மக்களவைத் தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் வாக்களிப்பின் அவசியம் குறித்து கடந்த 12-ம் தேதி விழுப்புரம் ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி மற்றும் வாக்களிப்பது தொடர்பான துண்டறிக்கையை பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகளுக்கு வழங்கியது.
தொடர்ந்து நேற்று தேர்தல் அதிகாரிகள், விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் வாக்களிக்கும் இயந்திர மாதிரியை பொதுமக்கள் பார்வைக்கு வைத்து செய்முறை விளக்கம் அளித்தனர்.
மேலும் அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோ, ஷேர் ஆட்டோ போன்றவைகளில், ‘வாக்களிப்பீர்’ என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஆனால் ஆட்சியரும், மாவட்ட வருவாய் அலுவலரும் பயன்படுத்தும் அரசு வாகனங்களில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டிக் கொள்ளவில்லை.
‘பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக அதிகாரிகளும் தங்களது வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டலாமே! என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பு கின்றனர்.