

இந்தியாவிலேயே முதல்முறை யாக மழைநீரை சேகரிக்க ஜப் பான் தொழில்நுட்பத்தில் பிரம் மாண்டமான கீழ்நிலைத் தொட்டி சென்னை தரமணியில் பொதுப் பணித் துறை வளாகத்தில் அமைக் கப்பட்டுள்ளது. ரூ.1 கோடி மதிப்பீட் டிலான இந்த திட்டத்துக்கான நிதியை ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை ஏற்றுக்கொண்டது.
92 அடி நீளம், 37 அடி அகலம், 10 அடி ஆழத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த கீழ்நிலை தொட்டிக்குள் 2 அடிக்கு ஒன்று வீதம் 600 பிளாஸ்டிக் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பொருட்களால் ஆன இத்தூண்கள் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும்.
36,000 சதுர அடியில் அமைந் துள்ள இந்தத் தொட்டி மூலம் 6 லட்சம் லிட்டர் மழைநீரை சேமிக்க முடியும். 2017-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் முடிவடைந் துள்ளன. தற்போது இந்தத் தொட்டி யில் 3 லட்சம் லிட்டர் மழைநீர் சேகரிக்கப்பட்டு அந்த வளாகத்தில் பணியாற்றும் ஊழியர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நீரை அப்பகுதி மக்களுக்கு விநியோகிக்கவும் முடிவு செய் துள்ளனர்.
ஜப்பான் தொழில்நுட்பத்தில் ஜப் பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் அமைக்கப்பட் டுள்ள இந்த மழைநீர் சேகரிப்பு கீழ்நிலைத் தொட்டியை பொதுப் பணித் துறையிடம் முறைப்படி ஒப்படைக்கும் நிகழ்ச்சியும் மழை நீர் சேகரிப்பு தொடர்பான கருத் தரங்கமும் சென்னையில் நேற்று நடைபெற்றது.
அப்போது ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிர்வாகிகள் செய்சிரோ டகாய், யூகா மட்சுசீபா ஆகியோர் பொதுப்பணித் துறை இணை தலைமைப் பொறியாளர் பாண்டியன், செயற்பொறியாளர் கள் எஸ்.ராஜா, ஏ,.தனபால் ஆகி யோரிடம் ஒப்படைத்தனர்.
இதைத்தொடர்ந்து, ஜப்பான் தொழில்நுட்பத்தில் ஏற்படுத்தப் பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு முறை யையும் அதற்காக அமைக்கப்பட் டுள்ள கீழ்நிலைத் தொட்டியின் செயல்பாடுகளையும் செயற்பொறி யாளர் ராஜா விவரித்தார். அப் போது அவர் கூறியதாவது:
மக்களின் அடிப்படை தேவை தண்ணீர். தண்ணீர் தட்டுப்பாடு என்பது சென்னை நகரை எப் போதும் அழுத்திக் கொண்டிருக்கும் பிரச்சினை. மார்ச் மாதமே தண்ணீர் பிரச்சினை தலைதூக்க ஆரம்பித்து விட்டது. மே, ஜூன் மாதங்களில் நிலைமை எப்படி இருக்குமோ என்று தெரியவில்லை. இத்தகைய சூழலில் மழைநீர் சேகரிப்பு திட்டம் மூலம் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கலாம்.
அந்த வகையில், தரமணி வளாகத்தில் ஜப்பான் தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கீழ்நிலைத் தொட்டி மூலமாக 3 லட்சம் லிட்டர் மழைநீரை சேகரித்து வைத்துள் ளோம். எங்களுக்கு 3 மாதங்களுக் குத் தேவையான நீர் அங்கு சேமிக்கப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக, ஜப்பானை சேர்ந்த மழைநீர் சேகரிப்பு, நீர் வடிகட்டும் தொழில்நுட்ப சங்கத்தின் நிர்வாக இயக்குநர் ஹிரோயாகி ஓகூய் அறிமுகவுரை ஆற்றினார்.
ஜப்பான் உதவியுடன் அமைக்கப் பட்டுள்ள இந்த மாதிரி மழைநீர் திட்டம் குறித்து பொதுப்பணித் துறை இணை தலைமைப் பொறி யாளர் பாண்டியனிடம் கேட்ட போது, “ரூ.1 கோடியே 6 லட்சம் மதிப்பிலான இத்திட்டத்துக்கு ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை ஸ்பான்சர் செய்துள்ளது. நீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் இத்திட்டத்தை செயல்படுத்தலாம். இந்த தொழில்நுட்ப முறையை தமிழகம் முழுவதும் நடைமுறைப் படுத்துவது குறித்து ஆய்வு செய் யப்பட்டு வருகிறது” என்றார்.