

வேட்புமனு பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனின் வேட்பு மனுவினை ஏற்கக்கூடாது என திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரின் மனு மீதான பரிசீலனை மதியத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் இயக்குநராக உள்ளது, கணவரின் வருமானம் மற்றும் குற்ற வழக்கு குறித்து வேட்பு மனுவில் குறிப்பிடாததால் தமிழிசை மனு மீதான பரிசீலனை நிறுத்திவைக்க வேண்டும் என திமுக கோரியிருந்தது.
இந்த சர்ச்சையால் மனு பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், "குற்ற வழக்கு இல்லை. நான் கற்ற பரம்பரை. குற்ற பரம்பரை அல்ல.கணவரும் அவ்வாறே.வீண் வதந்தி? தோல்வி பயம்???" என பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவடைந்தது. மக்களவை தொகுதி வேட்பாளர்களாக 1263 பேரும் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர்களாக 490 பேரும் மனுத் தாக்கல் செய்தனர். மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (புதன்கிழமை) நடைபெற்று வருகிறது.