எம்.பி.க்கள் மேற்கொண்ட முயற்சியால் சவூதியில் இறந்தவரின் உடல் சொந்த ஊரில் அடக்கம்: 3 மாதத்துக்குப் பின் கொண்டுவரப்பட்டது

எம்.பி.க்கள் மேற்கொண்ட முயற்சியால் சவூதியில் இறந்தவரின் உடல் சொந்த ஊரில் அடக்கம்: 3 மாதத்துக்குப் பின் கொண்டுவரப்பட்டது
Updated on
1 min read

சவூதி அரேபியாவில் உயிரிழந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. கடலூர் எம்பி அருண்மொழித்தேவன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் ஆகியோரின் தீவிர முயற்சியால் உடல் எடுத்துவரப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள வெண்கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (49). மனைவி செந்தமிழ்செல்வி. இவர்களுக்கு 3 மகன் கள். சுப்ரமணியன் சவூதிஅரேபியாவில் உள்ள மருந்து நிறுவனத்தில் பணிபுரி வதற்காக கடந்த 2010-ம் ஆண்டு சென்றார். இந்நிலையில், 2014 ஜூலை 1-ம் தேதி அங்கு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சுப்ரமணியத்தின் மகன்கள் இந்திய தூதரகத்தைத் தொடர்புகொண்டு தந்தையின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர முயற்சி மேற்கொண்டனர். தூதரக அதிகாரிகள் கேட்ட ஆவணங்கள் அனைத்தும் கொடுத்தும் உடலை எடுத்து வருவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும் இடையில் ரம்ஜான் பண்டிகை காலம் வந்ததால் அந்நாட்டு அதிகாரிகள் உடலை அனுப்ப போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இச்சம்பவம் குறித்து திட்டக்குடி அதிமுக ஒன்றியக் கவுன்சிலர் ரத்தினசபாபதி, கடலூர் எம்பி அருண்மொழித்தேவன் கவனத்துக்கு கொண்டு சென்றார். சுப்ரமணியத்தின் மகன்கள் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் தருண்விஜய் மூலமாகவும் முயற்சி மேற்கொண்டிருந்தனர்.

இரு எம்பிக்களும், தூதரக அதிகாரி களிடம் பேசி வந்தனர். இதன் காரண மாக சுப்ரமணியத்தின் உடல் நேற்று சென்னை கொண்டு வரப்பட்டது. பின்னர் சொந்த ஊரில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in