

கோவை அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேரை பிடித்து போலீ ஸார் விசாரணை நடத்தி வருகின் றனர்.
கோவை துடியலூரை அடுத்த பன்னிமடை பகுதியைச் சேர்ந்த வரின் 7 வயது மகள் திப்பனூரில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 25-ம் தேதி மாலை பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சிறுமி, வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தார். சிறுமி மாலை 6 மணிக்கு பின்னர் மாயமானார். இதுதொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் தடாகம் போலீஸார் சிறுமியை தேடினர்.
ஆனால், மாயமான சிறுமி நேற்று முன்தினம் காலை வீட்டருகே இருந்த ஆள்நடமாட்டம் இல்லாத சந்து பகுதியில் சடலமாக கிடந் தார். சிறுமியின் மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி சிறுமியின் குடும்பத் தினர், உறவினர்கள், பொதுமக்கள் அரசு மருத்துவமனை நுழைவு வாயில் அருகே மற்றும் பன்னி மடையில் நேற்று முன்தினம் மறியல் போராட்டம் நடத்தினர்.
பிரேத பரிசோதனை அறிக்கை
சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று வெளியானது. அதில் சிறுமி பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதைத் தொடர்ந்து சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யும் வரை சிறுமியின் சடலத்தை வாங்க மாட்டோம் என அவரது குடும்பத் தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாதர் சங்கம் உள்ளிட்ட சில பொது நல அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து சிறுமியின் உயிரிழப் புக்கு காரணமானவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக 4 பேரை பிடித்து விசாரணை நடத்துவது தொடர்பான வீடியோ காட்சிகளை சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீஸார் காட்டினர். இதையடுத்து சமாதான மடைந்த அவர்கள், சிறுமியின் சடலத்தை நேற்று அரசு மருத்துவ மனையில் இருந்து வாங்கிச் சென்றனர்.
மக்கள் சாலை மறியல்
இதற்கிடையே, சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமானவர் களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சிறுமியின் உறவினர் கள், அந்த பகுதி மக்கள், பொது நல அமைப்பினர் துடியலூர் சந்திப்பு பகுதியில் நேற்று மதியம் சில மணி நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர் களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் கலைந் தனர்.
இவ்வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து காவல் ஆய்வாளர் பால முரளி சுந்தரம் கூறியதாவது: சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டு கொல்லப்பட்டது பிரேத பரி சோதனை அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக கொலை மற்றும் போக்ஸோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. சந்தேகத்துக்குரிய 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு காவல் ஆய்வாளர் கூறினார்.