ரஃபேல் விவகாரத்தில் ‘தி இந்து நாளிதழுக்கு மிரட்டல்: மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் - சென்னையில் பத்திரிகையாளர்கள் நடத்தினர்

ரஃபேல் விவகாரத்தில் ‘தி இந்து நாளிதழுக்கு மிரட்டல்: மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் - சென்னையில் பத்திரிகையாளர்கள் நடத்தினர்
Updated on
2 min read

ரஃபேல் விவகாரத்தில் செய்திக் கட்டுரை வெளியிட்டதற்காக ‘தி இந்து' ஆங்கில நாளிதழ் மீதும் ‘தி இந்து' குழுமத்தின் தலைவர் என்.ராம் மீதும் வழக்கு தொடரப் போவதாக மத்திய அரசு மிரட்டல் விடுத்ததைக் கண்டித்து சென்னையில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக அதன் ஆவணங்களு டன் ‘தி இந்து' ஆங்கில நாளிதழில் செய்திக் கட்டுரை வெளிவந்தது. இதற்காக நாளிதழ் மீதும் 'தி இந்து' குழுமத்தின் தலைவரான பத்திரிகை யாளர் என்.ராம் மீதும் அரசாங்க ரகசிய சட்டத்தின்கீழ் மத்திய அரசு வழக்கு தொடரப் போவதாக செய்திகள் வெளியாயின.

மத்திய அரசின் இந்த மிரட்டலைக் கண்டித்து ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி, ஊடக சுதந்திர மையம், சென்னை பிரஸ் கிளப் ஆகியவை சார்பில் சென்னை யில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராள மான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பத்திரிகை யாளர் நக்கீரன் கோபால் பேசும் போது, ‘‘பத்திரிகையாளர்களை மிரட்ட அரசாங்க ரகசிய சட்டத்தை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ரஃபேல் பேரம் குறித்து ஆவணங்களுடன் கட்டுரை எழுதிய தற்காக என்.ராமை பாராட்டுகிறேன். ஆவணங்கள் தந்தவர்கள் குறித்த விவரங்களை எந்தச் சூழ்நிலை யிலும் தெரிவிக்க மாட்டேன் என்ற அவரது துணிச்சல் பாராட்டுக் குரியது. பத்திரிகையாளர்கள் பாது காப்பு விஷயத்தில் என்.ராம் எப் போதுமே முன்னே நிற்பவர். ஊடக சுதந்திரத்துக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்’’ என்றார்.

ஊடக சுதந்திரத்துக்கான கூட் டணி அமைப்பைச் சேர்ந்த அ.கும ரேசன் பேசும்போது, ‘‘அரசாங்க ரகசிய சட்டத்தை அகற்றுவதற்கு அனைவரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். ‘தி இந்து' நாளி தழுக்கு எதிரான மிரட்டல் விவகாரத் தில் பத்திரிகையாளர்கள் அனைவ ரும் ஒன்றுசேர்ந்து நிற்க வேண்டும். தற்போதைய சூழலில் ஊடகச் சுதந்திரத்தை பாதுகாப்பது என்பது முக்கியமான ஒன்று" என்றார்.

அரசாங்க ரகசிய சட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்துப் பேசிய வழக்கறிஞர் பி.பி.மோகன், ‘‘இந்தச் சட்டம் காலாவதியான ஒரு சட்டம். இதை பத்திரிகை யாளர்களுக்கு எதிராக பயன் படுத்தக் கூடாது’’ என்று வலியுறுத் தினார். ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பாளர் பீர் முகமது, புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்வாக ஆசிரியர் எஸ்.கார்த்திகை செல்வன், கார்ட்டூனிஸ்ட் ஜி.பாலா, பத்திரிகையாளர் கவிதா முரளி தரன், மாற்றத்துக்கான ஊடகவிய லாளர்கள் மையத்தைச் சேர்ந்த அசீப், ஊடகவியலாளர்கள் அறக் கட்டளையைச் சேர்ந்த சந்தியா ரவிசங்கர் ஆகியோர் ஊடகச் சுதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.

இதேபோல் மத்திய அரசின் மிரட்டலுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஜனநாயகத்தின் 4-வது தூணாக திகழ்வது ஊடகம். ஊடகச் சுதந் திரத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in