Published : 30 Mar 2019 06:55 AM
Last Updated : 30 Mar 2019 06:55 AM

பூந்தமல்லி அருகே கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல்: 3 மாணவர்களுக்கு கத்திக்குத்து

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில் இருந்து, ஸ்ரீபெரும்புதூர் நோக்கி நேற்று மாலை அரசு பஸ் ஒன்று சென்றுக் கொண்டி ருந்தது. பூந்தமல்லி அருகே வந்தபோது நசரத்பேட்டையில் சில மாணவர்கள் பஸ்ஸை மறித்துஏறினர்.

பஸ்ஸில் பயணித்த திருவேற்காடு அருகே உள்ள தனியார்கல்லூரி  மாணவர்கள் 3 பேரை திடீரென அவர்கள் கத்தியால் சரமாரியாகக் குத்தினர். இதனை பார்த்த பயணிகள் அலறினர்.

அப்போது, அவ்வழியேசென்னை பெருநகர காவல்துறையின் அம்பத்தூர் துணை ஆணையர் ஈஸ்வரன் மற்றும் போலீஸார் வந்தனர். இதைப்பார்த்ததும் தப்பியோடிய மாணவர்களில், சென்னை அண்ணாசாலை பகுதியில் உள்ள அரசு கல்லூரி மாண வரான சரவணனை பிடித்து விசாரித்தனர்.

இச்சம்பவத்தில், படுகாயம டைந்த ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த மகேஷ், ராஜேஷ், உமாமுருகன் ஆகிய மாணவர் கள், பூந்தமல்லி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், சென்னை-  ஸ்ரீபெரும்புதூர் மார்க்கத்தில் செல்லும் அரசு பஸ்ஸில், பயணம் செய்யும் சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசுக் கல்லூரி மாணவர்களுக்கும் கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே, ’ரூட்  தல’ பிரச்சினை காரண மாக மோதல் இருந்துள்ளது.

அதன் காரணமாக, கீழ்ப்பாக்கம் அரசு உதவி பெறும் கல்லூரிமாணவர்கள் என நினைத்து, திருவேற்காடு அருகே உள்ளதனியார் கல்லூரி மாணவர்களை குத்தியுள்ளனர். 

இதுகுறித்து, நசரேத்பேட்டை போலீஸார் வழக்கு பதிந்து தப்பிய மாணவர்களை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x