

தேர்தலை முன்னிட்டு நிலை கண்காணிப்புக் குழுவினர், பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள் இருந்தால் தங்கம், வெள்ளி பொருட்கள், நகைகளை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் நகை வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தலைமையில் சங்க நிர்வாகிகள் நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவை சந்தித்து மனு அளித்தனர்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஜெயந்திலால் சலானி கூறியதாவது: எங்கள் பொருட் கள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்படுகின்றன. தேவை யில்லாமல் தடுத்து நிறுத்தப்பட்டு பரிசோதனை என்ற அடிப்படையில் காலதாமதப்படுத்துகின்றனர்.
பறக்கும்படையினர் எங்க ளுக்கு பெரிய அளவில் தொந்த ரவு அளிக்கின்றனர். அதாவது, 94 கிலோ தங்கத்தை பிடித்துள் ளனர். அதன் மதிப்பு ரூ.27 கோடி. சாலையில் நிறுத்தி சோதனை யிடும்போது இப்பொருளுக்கு பெரிய அளவில் பாதுகாப்பு குறை பாடு ஏற்படும்.
எனவே, ஆவணங் களை சரிபார்த்து உடனடி யாக அனுப்பி வைக்க கோரிக்கை விடுத்துள்ளோம். வருமானவரித் துறை, வருவாய் புலனாய்வுத் துறைக்கு தகவல் அனுப்பி அவர்கள் வந்து ஆய்வு செய்வதென்றால், கால தாமதம் ஏற்படும். இதனால், எங்களுக்கு தொழில் பாதிப்பு ஏற்படுகிறது. உரிய ஆவணங் களை பரிசோதிக்கும் அளவுக்கு அதிகாரிகளும் நியமிக்கப் படுவதில்லை. திடீரென ஆவணங் களை ஒருவர் பார்க்கும்போது காலதாமதம் ஏற்படுகிறது.
ஆவணங்களை பொறுத்த வரை, நகை தொடர்பான விவரம் கொண்ட கடிதம் இருக்கும். கொண்டு செல்பவரின் விவரம், அவரது அடையாள சான்று இருக்கும். காப்பீடு தொடர்பான நகல் இருக்கும் என்றார்.