Published : 11 Mar 2019 09:29 AM
Last Updated : 11 Mar 2019 09:29 AM

ஒரே நாளில் சித்திரை தேர்திருவிழா-தேர்தல் திருவிழா : ஏப்ரல் 18-ல் நடப்பதால் சிக்கல்

உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத்திருவிழாவின் தேர்த்திருவிழாவும், மக்களவைத் தேர்தல் திருவிழாவும் ஏப்-18ம் தேதி ஒரே நாளில் நடக்கிறது.

கோயில் நகரமான மதுரையில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டாலும் முக்கியமான திருவிழாவான சித்திரைத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவின் தேர்த்திருவிழா, அதை தொடர்ந்து நடக்கும் கள்ளழகர் ஆற்றில் இறக்கும் நிகழ்ச்சிகள் விஷேசமானவை. இந்த நாட்களில் மதுரையே குலுங்கும் வகையில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள்,குவிவார்கள்.

வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் சித்திருவிழாவை வேடிக்கைப்பார்க்க வருவார்கள். இந்த ஆண்டு சித்திரைத்திருவிழா, ஏப்ரல் 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதைதொடர்ந்து 15-ம் தேதி, அருள்மிகு மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகமும், 16-ம் தேதி மீனாட்சியம்மன் திக்குவிஜயமும், 17-ம் தேதி அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும் நடக்கிறது.

ஏப்ரல் 18-ம் தேதி சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழாவும் நடக்கிறது. அதிகாலை 5.45 மணிக்கு தொடங்கும் இந்த தேர்த்திருவிழாவில் பக்தர்கள் தேரை வம்பிடித்து இழுத்து தொடங்கி வைப்பார்கள்.சித்திரைத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை தற்போதே திட்டமிட்டு, மீனாட்சிம்மன் கோயில் நிர்வாகம், அதற்கான ஏற்பாடுகளை தொடங்கிவிட்டது.

சித்திரைத் திருவிழாவுக்கான முகூர்த்த கால் விழா நடந்துவிட்டது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதி நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. தமிழகம், புதுவைக்கான மக்களவைத் தேர்தல் சித்திரைத் திருவிழாவின் தேர்திருவிழா நடக்கும் ஏப்-18ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், மதுரையின் சித்திரை விழாவின் தேர்த்திருவிழாவும், தேர்தல் திருவிழாவும் மதுரையில் ஒரே நாளில் நடக்கிறது. தேர்த்திருவிழாவில் கலந்து கொள்ள உள்ளூர் மக்கள் மட்டுமின்றில வெளியூர் பக்தர்களும் மதுரை வருவார்கள். தேர்தல் நடப்பதால் வெளியூர்களில்வ சிப்போர் மதுரையில் நடக்கும் தேர்த்திருவிழாவுக்கு வர இயலாமல் போகும்.

மேலும், ஒரே நாளில் தேர்தல் திருவிழாவுக்கும், தேர்தல் திருவிழாவும் நடப்பதால் மக்கள், இரண்டு திருவிழாவுக்கும் தயாராகுவதில் சிரமம் ஏற்படும்.

இதுகுறித்து மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் நா.நடராஜனிடம்கேட்டபோது, ‘‘எங்களைப் பொறுத்தவரையல் திட்டமிட்டப்படி குறித்த தேதியில் தேர்த்திருவிழா நடக்கும். முகூர்த்தம் குறித்து முன்கூட்டியே முடிவு செய்யப்பட்ட விஷயம். தேர்தலுக்காக மாற்றி வைக்கப்பட வாய்ப்பேஇல்லை, ’’ என்றார்.   .

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x