மாணவரின் மோட்டார் சைக்கிளை ரூல்தடியால் தாக்கி உடைத்த போலீஸார்: வைரலாகும் காணொளி

மாணவரின் மோட்டார் சைக்கிளை ரூல்தடியால் தாக்கி உடைத்த போலீஸார்: வைரலாகும் காணொளி
Updated on
1 min read

சென்னை கடற்கரை சாலையில் சாலை ஓரம் நின்றிருந்த மாணவரின் மோட்டார் சைக்கிளை ரூல் தடியால் போலீஸார் தாக்கி உடைக்கும் காணொளி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

அந்த காணொளியில், சென்னை கடற்கரைச்சாலை போர் நினைவுச் சின்னம் எதிரில் அன்னை சத்யா நகர் எனும் குடிசைப்பகுதி அருகே சாலை ஓரமாக நிறுத்தப்பட்டுள்ள மோட்டார் சைக்கிளுக்கு சொந்தக்கார மாணவனை சிவப்பு நிற பொலீரோ ரோந்து வாகனத்தில் வந்த எஸ்.ஐ  மாணவரை அழைத்து விசாரணை நடத்துகிறார்.

அப்போது ஓட்டுநர் சீட்டிலிருந்த ஊர்க்காவல்படை காவலர் ரூல் தடியுடன் இறங்குகிறார். ரூல் தடியால் மாணவரின் வாகனத்தை சரமாரியாக தாக்கி உடைக்கிறார். ஹெட்லைட், முன்பாகத்தை தாக்கி உடைக்கிறார். இதனால் பதறிப்போன மாணவர் எஸ்.ஐயிடம் அதைக்காட்டிவிட்டு தனது வாகனம் அருகில் வந்து எந்த எதிர்ப்பும் காட்டாமல் எடுக்க பார்க்கிறார்.

ஆனாலும் தாக்குதல் தொடர்கிறது. எஸ்.ஐ அதை வேடிக்கைப் பார்க்கிறார். பின்னர் அந்த மாணவர் வாகனத்தை எடுத்துச் செல்கிறார். இதை அங்குள்ள ஒருவர் தனது செல்போனில் ரகசியமாக எடுத்து சமூக வலைத்தளத்தில் போட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

இந்த விவகாரம் தற்போது காவல் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. போலீஸ் ரோந்து வாகனம் கோட்டை காவல் நிலையத்தை சேர்ந்தது என தெரியவந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர் ஒருவர் காவல்துறையில் மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அவர்களது மனதில் உள்ள வன்முறையின் வெளிப்பாடே இது என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in