

மக்கள் நீதி மய்யம் வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் சின்னமான பேட்டரி டார்ச்சை’ கமல்ஹாசன் அறிமுகம் செய்தார்.
மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகள் அவரவர் சின்னங்களில் போட்டியிடலாம். அதேசமயம் இதுவரை குறிப்பிட்ட வாக்குகள் பெறாத அங்கீகாரம் இல்லாத கட்சிகள் மற்றும் புதிய கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கியுள்ளது.
இந்த பட்டியலை தேர்தல் கமிஷன் தனது இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட உள்ளது.
தங்கள் கட்சிக்கு 'பேட்டரி டார்ச் ' சின்னம் ஒதுக்கியதற்காக தேர்தல் கமிஷனுக்கு கமல், ட்விட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமல் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,‘‘மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு “பேட்டரி டார்ச்” சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. பொருத்தமான சின்னம் தான். @maiamofficial தமிழ்நாட்டிற்கும் இந்திய அரசியலுக்கும் ஒளி தரும் புது விளக்காய் இன்று முதல் மிளிரும்’’ எனக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் சின்னமான பேட்டரி டார்ச்சை’ கமல்ஹாசன் அறிமுகம் செய்தார். பின்னர் பேசிய அவர் மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.