

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் #VanakkamRahulGandhi முந்தி முதலிடத்திற்கு வந்த நிலையில் பாஜக ஐடி பிரிவுக்கு சவால் விடுத்திருக்கிறார் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தமிழக வருகையை ஒட்டி இன்று (புதன்கிழமை) காலை ட்விட்டரில் இந்திய அளவில் #GoBackRahul #GoBackPappu போன்ற ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகின.
ஆனால், காலையில் அவர் சென்னையில் ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் பேசிய பின்னரும், செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட பின்னரும் #VanakkamRahulGandhi என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் முதலிடத்திற்கு வந்துள்ளது.
இதை சுட்டிக்காட்டியுள்ள ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், "அன்புள்ள பாஜக ஐடி பிரிவினரே, ராகுல் காந்தி ஒற்றை ஆளாக நீங்கள் உருவாக்கிய #GoBackRahul ஷேஷ்டேகை தவிடுபொடியாக்கியுள்ளார்.
அதற்குக் காரணம் அவருடைய ஆழமான அறிவு, எளிமை மற்றும் அன்பு. உங்களது தலைவர் நரேந்திர மோடி ஒருமுறையேனும் இத்தகைய பேச்சை மேற்கொள்ள தயாரா? இது ஒரு வெளிப்படையான சவால். தயவுசெய்து ஓடி ஒளியாதீர்" எனப் பதிவிட்டுள்ளார்.