Published : 11 Mar 2019 09:18 AM
Last Updated : 11 Mar 2019 09:18 AM

கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியலை இன்று அறிவிக்கிறார் ஸ்டாலின்

திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிப்பார் என கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் 10, மார்க்சிஸ்ட் 2, இந்திய கம்யூனிஸ்ட் 2, விசிக 2, மதிமுக 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 1, இந்திய ஜனநாயக கட்சி 1 என தொகுதி கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதி களின் எண்ணிக்கை முடிவு செய் யப்பட்டாலும், எந்தெந்த தொகுதி கள் என்பது முடிவாகவில்லை.

இது தொடர்பாக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் திமுக பொரு ளாளர் துரைமுருகன் தலைமை யிலான குழு நேற்று முன்தினம் முதல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் காங் கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை யிலான மூவர் குழுவினர் பேச்சு நடத்தினர். அப்போது காங்கிரஸ் போட்டியிட விரும்பும் சுமார் 15 தொகுதிகளின் பட்டியலை அளித் தனர்.

பின்னர், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தர சன் தலைமையிலான குழுவினர் திமுகவுடன் பேச்சு நடத்தினர். அப்போது இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் 2 தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு உடன்பாடு கையெழுத்தானது. அதனைத் தொடர்ந்து நேற்று மார்க்சிஸ்ட், மதிமுக போட்டியிடும் 2 தொகுதி கள் முடிவு செய்யப்பட்டன.

மார்க்சிஸ்ட் கட்சிக்கு மதுரை, கோவை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, தென்காசி, விசிகவுக்கு சிதம்பரம், விழுப்புரம், மதிமுகவுக்கு ஈரோடு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல், இந்திய ஜனநாயக கட்சிக்கு பெரம்பலூர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம், காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, சிவகங்கை, திருநெல்வேலி, திருப்பூர், ஆரணி, திருச்சி, திருவள்ளூர் அல்லது காஞ்சிபுரம் தொகுதிகளும் ஒதுக் கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தொகுதிப் பட்டியல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிப்பார் என கூறப்படு கிறது.

திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை திமுகவின் உதயசூரியன் சின்னத் தில் போட்டியிடுகின்றன. உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடு மாறு விசிக, மதிமுகவை திமுக வலியுறுத்தி வருவதாகத் தெரிகிறது. இதற்கு விசிக, மதிமுக ஒப்புக்கொண்டால் 25 மக்களவைத் தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் களத்தில் இருக்கும்.

முக்கிய ஆலோசனை

திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவல கமான அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. ஆலோச னைக் கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.

இன்று நடக்கும் மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக் கள் கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு, பிரச்சார வியூகம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக திமுக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். திமுக போட்டியிடும் தொகுதிகள் மட்டுமல்லாது, கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளிலும் எப்படி தேர்தல் பணியாற்றுவது என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப் படும் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x