Published : 04 Mar 2019 12:48 PM
Last Updated : 04 Mar 2019 12:48 PM

‘பெயில் குடும்பத்தின் ஆட்சி அதிகார பசி’: ப.சிதம்பரத்தின் மீது தமிழிசை தாக்கு

புல்வாமா சிஆர்பிஎஃப் வீர்ர்கள் வீர மரணம் எய்தியப் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலகோட்டில் இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் 250க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியானதாக ஆளும் பாஜக அரசின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.

 

இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை அரசியலுக்கு பயன்படுத்தவில்லையா என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

 

அமித் ஷாவுக்குக் கேள்வி எழுப்பியவர்களில் ப.சிதம்பரமும் ஒருவர். அவர் இது குறித்து கேள்வி எழுப்பும்போது, “" இந்திய விமானப் படையின் வீர நடவடிக்கையைப் பாராட்டிய முதல் மனிதர் திரு ராகுல் காந்தி என்பதைப் பிரதமர் மோடி மறந்து விட்டார். விமானப்படை துணை மார்ஷல், பாலகோட் தாக்குதலில் தீவிரவாதிகள் உயிர் பலி குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால், வெளியுறவுத்துறை அமைச்சகமோ, மக்களோ அல்லது ராணுவத்தினரோ யாரும் உயிரிழக்கவில்லை என்கிறது. ஆனால், 300 முதல் 350 உயிரிழப்புகள் ஏற்பட்டது என யார் வெளியிட்டார்கள்?. இந்தியக் குடிமகன் என்ற முறையில் என்னுடைய அரசை நான் நம்புகிறேன். ஆனால் உலகம். நம்ப வேண்டுமே? அதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டும் என்று சிலர் சொன்னதில் என்ன தவறு? " எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

ப.சிதம்பரத்தின் இந்தக் கருத்தை விமர்சித்து தமிழைசை தன் ட்விட்டர் பக்கத்தில்,  “மக்களின் நம்பிக்கை இழந்த ஊழல்  காங்.? பாக்.ஆதரவு குற்றசாட்டு?உயிரை துச்சம் என பாக்.எல்லைக்குள் சென்று வென்று வந்த வீரத்தை குறை கூறும் வீணர்கள்.மசூத்ஆஷாத் தம்பியே தாக்குலால் பாதிப்பு என்ற பின்பும் அரசை  குறைகாணும் .ப சி? பெயில் குடும்பத்தின் ஆட்சி அதிகார பசி?மக்களுக்கு புரிகிறது.” என்று தாக்கிப் பேசியுள்ளார்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x