Published : 05 Mar 2019 07:27 AM
Last Updated : 05 Mar 2019 07:27 AM

தினந்தோறும் தேசியக்கொடி ஏற்றி நாட்டுப்பற்றை வளர்க்கும் கிராம மக்கள்

மதுராந்தகம் அருகே சிறுதாமூர் என்ற கிராமத்தில் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் தேசப் பற்றை வளர்ப்பதற்காக தினமும் தேசியக் கொடியேற்றி கிராம மக் கள் மரியாதை செலுத்தி வரு கின்றனர்.

இந்திய சுதந்திர வரலாற்றில் இன்றைய தலைமுறை அறிந்து கொள்ளும் வகையிலும் இளைஞர் கள் மத்தியில் தேசப்பற்றை வளர்க்கும் விதத்திலும் தினமும் தேசியக் கொடியேற்றி, மரியாதை செலுத்தும் நிகழ்வு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிறுதாமூர் என்ற குக்கிராமத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மதுராந்த கம் அருகே உள்ள தொழுப்பேட்டில் இருந்து ஒரத்தி செல்லும் சாலை யில் உள்ளது இக் கிராமம். இக் கிராமத்தில் உள்ள முதி யோர் முதல் சிறுவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் ஒரு நாளைக்கு ஒருவர் என தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர்.

கடந்த சுதந்திர தினத்தில் இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாசா அறக்கட்டளையும், ஆக்சிஸ் வங்கி ஊழியர்களும் இணைந்து ஊருக்கு நடுவில் கொடிக்கம்பம் அமைத்து தேசியக் கொடியை ஏற்றினர். அதுமுதல், இளைஞர்கள், பொதுமக்கள் பலர் தாமாகவே முன்வந்து தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வில் தினமும் பங்கேற்கின்றனர்.

இதுகுறித்து அந்தக் கிராமத் தைச் சேர்ந்த ஸ்ரீநிவாசா அறக்கட் டளையின் நிர்வாக இயக்குநர் விஜயகிருஷ்ணன் கூறியதாவது:

தெலங்கானா மாநிலம் ஜம்மி குண்டா நகரத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் சிறுதாமூர் கிராமத் தில், பொதுமக்களிடம் தேசப் பற்றை வளர்க்கும் விதமாக பொது இடத்தில் தேசியக் கொடியை ஏற்றும் பணியைக் கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தில் தொடங்கி வைத்தோம். அதுமுதல் பொதுமக்கள் தினமும் ஆர்வத்துடன் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி வருகின்றனர். தேசிய கீதமும் இசைக்கப் படுகிறது. பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் இங்கு கொடி வணக்கம் செலுத்திவிட்டுத்தான் பள்ளிக்குச் செல்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேருந்து வசதி, கல்வி வசதி, சுகாதார வசதி என எந்த வசதிகளும் இல்லாத வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களையும், தொழி லாளர்களையும் கொண்ட இந்த சிறுதாமூர் கிராமத்து மக்களின் தேசப்பற்று, அக்கம்பக்கத்து ஊரில் உள்ள சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x