Published : 02 Mar 2019 09:32 PM
Last Updated : 02 Mar 2019 09:32 PM

மெரினா கடற்கரையில் அடுத்தடுத்து ஒதுங்கிய 3 உடல்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை மெரினா கடற்கரையில் கடலில் குளித்த 2 பேர் அலையில் சிக்கியும், அடையாளம் தெரியாத பிணம் ஒன்றும் அடுத்தடுத்து கரையில் ஒதுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சென்னை மெரினா கடற்கரையில் முன்னர் உடைந்த கப்பலின் பாகங்கள் கூரான கத்திப்போல் நீட்டிக்கொண்டிருக்கும். அதன் கூர்முனையில் சிக்கி காயம்பட்டு அதனால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அப்போது அதிகமாக இருந்தது.

2004 சுனாமிக்குப் பின் கடலில் கரையை ஒட்டிய பகுதியில் பெரிய மாற்றம் வந்ததாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் திடீரென வரும் அலையால் சுருட்டப்பட்டு உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க கடலில் யாரும் குளிக்கக்கூடாது என அறிவிப்பு பலகையை போலீஸார் வைத்துள்ளனர்.

இதுதவிர பீச் பேட்ரால் என்கிற ரோந்தும், குதிரைப்படை ரோந்தும் உள்ளது. ஆனாலும் கடலில் குளிக்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.

இன்றும் அதேபோன்று கடலில் குளித்த ஒரு கல்லூரி மாணவர் உள்ளிட்ட இருவர் இழுத்துச் செல்லப்பட்டு உடல் கரை ஒதுங்கியது.

சென்னை மெரினா கடலில் 8 மணிநேரத்தில் அடுத்தடுத்து மூன்று உடல்கள் கரை ஒதுங்கியுள்ளது. இந்த சம்பவம் சுற்றுலா வந்தவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடற்கரை மணலில் ரோந்து பணியில் ஈடுபட்டுவந்த மோட்டார் பைக் வாகனம் பல நாட்களாக ரோந்துக்கு வராததே காரணம் என் வியாபாரிகள் கூறுகின்றனர்.

சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலைக்கு பின்புறம் காலை 7:30 மணிக்கு அடையாளம் தெரியாத சுமார் 27 வயது மதிக்கதக்க ஆண சடலம் கரை ஒதுங்கியது. அடுத்து காலை 11:15 மணிக்கு எம்.ஜி.ஆர் நினைவிடம் பின்புறம் JNN கல்லூரியில் பயின்று வந்த கண்ணன் என்பவரது சடலம் கரை ஒதுங்கியது.

அடுத்து மதியம் 2:30-க்கு நண்பர் ஜெயகுமாருடன் குளித்து கொண்டிருந்த ஜெயசந்திரன் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு பிறகு சடலமாக கரை ஒதுங்கியுள்ளார். மூன்று சடலங்களும் கைப்பற்றபட்டு காவல்துறையினரால் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 8 மணி நேரத்தில் இடைவெளிக்குள் மெரினா கடலில் அடுத்தடுத்து மூன்று உடல்கள் கரை ஒதுங்கிய சம்பவம் சுற்றுலா வந்தவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடற்கரை ஒட்டிய மணல் பரப்பில் கடலோர காவல் படையின் ரோந்து வரும் மோட்டார் வாகனம் கடந்த சில நாட்களாக வருவதில்லை என கடற்கரையில் உள்ள வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

தொடர்ந்து ரோந்து பணியின்போது எச்சரிக்கை விடுப்பது வழக்கம், பொதுமக்களை கடலுக்குள் குளிக்க செல்லகூடாது என எச்சரிக்கை வைக்கபட்டிருப்பதையும் மீறி கடலுக்குள் செல்வதே உயிரிழப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.

இன்று காலை 7-30 மணி அளவில் மெரினா கடற்கரை எம்ஜிஆர் சமாதி பின்புறம் உள்ள கடற்கரை மணற்பரப்பில் ஆண் பிணம் ஒன்று கரை ஒதுங்கியது. பிணத்தை போலீஸார் கைப்பற்றி அரசு பல்நோக்கு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்தனர். உடல் மீது காயங்கள் ஏதும் இல்லை.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x