ஹாட்லீக்ஸ் : ஈவிகேஎஸ்ஸுக்கு பயப்படும் ஓபிஎஸ்

ஹாட்லீக்ஸ் : ஈவிகேஎஸ்ஸுக்கு பயப்படும் ஓபிஎஸ்
Updated on
1 min read

 தேனி தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றிபெற்றால் கட்டாயம் மத்திய அமைச்சர் என்று பிரச்சாரம் செய்கிறது ஓபிஎஸ் கம்பெனி.

ஆனால், பிரச்சாரத்தில் இவர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் ஈவிகேஎஸ், “தேனியின் முக்கியப் பிரச்சினையே, ஓபிஎஸ்ஸும் அவரது மகனும்தான்.

 அகல ரயில் பாதை அமைப்பதற்காகப் பிரித்துப் போடப்பட்ட மதுரை - போடி ரயில்வே பாதை வேலை முடியாமல் இருக்கக் காரணம், ஒப்பந்ததாரரிடம் ஓபிஎஸ் 30 பர்சன்ட் கமிஷன் கேட்பதுதான்.

நான் ஜெயித்தால் ஆறே மாதத்தில் ரயில் பாதை வரும்” என்று கொளுத்திப் போட்டிருக்கிறார். இதைக் கேட்டுவிட்டு, “நம்ம ஐடி விங்க வெச்சு இளங்கோவன தொவைச்சு தொங்கவிடலாமா?” என்று ரவீந்திரநாத் குமார் ஓபிஎஸ்ஸிடம் கேட்டாராம்.

அதற்கு, “யப்பா... அந்தாள மத்தவங்க மாதிரி நெனச்சுறாத. அப்புறம் ஏடாகூடமா எதையாச்சும் எடுத்துவிட்டு, விழுற ஓட்டையும் நமக்கு விழவிடாம பண்ணிடுவாரு” என்று மகனை வாயடைத்துவிட்டாராம் ஓபிஎஸ்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in