

நடைபெற உள்ள நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடைபெற்றது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் நேரில் சந்தித்து தொகுதி நிலவரம் - வெற்றி வாய்ப்புக்கான காரணங்கள் குறித்து விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் செய்தனர்.
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ள திமுக மாநிலங்களவை எம்.பி கனிமொழி, முன்னாள் எம்.பி ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். மு.க. ஸ்டாலின் தகவல்களை கேட்டறிந்தார்.
இந்நேர்காணலின்போது அந்தந்த நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் - மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர,பகுதிச் செயலாளர்களிடமும் தொகுதி குறித்து விசாரித்தனர்.