7 பேரை விடுவிக்க அதிமுகவால்தான் முடியும்; சசிகலா சிறையில் இருந்து வந்தால் மகிழ்ச்சிதான் - ராஜேந்திர பாலாஜி கருத்து

7 பேரை விடுவிக்க அதிமுகவால்தான் முடியும்;  சசிகலா சிறையில் இருந்து வந்தால் மகிழ்ச்சிதான் - ராஜேந்திர பாலாஜி கருத்து
Updated on
1 min read

ஏழு பேரை விடுவிக்க அதிமுகவால்தான் முடியும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் திமுக நாடகமாடுகிறது. இரட்டை வேடம் போடுகிறது.

இப்போதைய சூழ்நிலையில், மத்தியில் ஆளும் பாஜகவுடன் இணக்கமாக இருந்து, ஏழு பேரையும் விடுதலை செய்ய, அதிமுகவால் மட்டுமே முடியும்.

மக்கள் நீதி மய்யம், இந்தத் தேர்தலில் களத்திலேயே இல்லை என்றுதான் சொல்லுவேன். அமமுகவின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சூழ்நிலைக் கைதியாக இருந்து, திமுகவை ஆதரித்து வருகிறார். திமுகவை உயர்த்திப் பேசி வருகிறார். சசிகலா சிறையிலிருந்து வந்தால் மகிழ்ச்சிதான்.

இவ்வாறு ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in