Published : 13 Mar 2019 08:22 AM
Last Updated : 13 Mar 2019 08:22 AM

தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற தமிழக அரசு முடிவு: கடும் நடவடிக்கை கோரி பல இடங்களில் போராட்டம்

தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தி உள்ள பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கோவை பொள்ளாச்சியை சேர்ந்த 19 வயது மாணவிக்கு, முகநூல் மூலம் பொள்ளாச்சி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த சபரிராஜன்(25) என்ற பொறியாளர் அறிமுகம் ஆனார். தனது பேச்சால் மயக்கி அந்த மாணவியை, கடந்த மாதம் 12-ம் தேதி தொடர்பு கொண்ட சபரிராஜன் ஊஞ்சவேலாம்பட்டிக்கு வரவழைத்தார். அங்கு சபரிராஜன், அவரது நண்பர்கள் திருநாவுக்கரசு(25), சதீஷ்(28), வசந்தகுமார்(27) ஆகியோர் சேர்ந்து, காரில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்து அதை ஆபாசமாக வீடியோ எடுத்து, மாணவியை இறக்கி விட்டனர். அதன்பின்னர், அந்த நான்கு பேரும் சேர்ந்து அந்த ஆபாச வீடி யோவை காட்டி, அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளனர்.

அந்த மாணவி இவ்விவகாரம் தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகி யோரை பிப்ரவரி 24-ம் தேதியும், முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசுவை மார்ச் 5-ம் தேதியும் கைது செய்தனர். இதற்கிடையே புகார் கொடுத்த பெண் ணின் சகோதரரை தாக்கிய பார் நாகராஜ், செந்தில், பாபு, வசந்த் ஆகிய 4 பேரை யும் போலீஸார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மணிகண்டனை போலீஸார் தேடி வருகின்றனர்.

பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் பெண்களுடன் அறிமுகம் ஏற்படுத்திக் கொண்டு, அவர்களுடன் நெருங்கி பழகி, தனி இடத்துக்கு வரவழைத்து ஆபாச படம் எடுத்து மிரட்டல் விடுப்பது, பணம் பறிப்பது போன்ற செயல்களில் கடந்த 7 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரை யும் விசாரணைக்கு பின்னர் போலீஸார் சிறையில் அடைத்தனர். மாநிலம் முழு வதும் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தி இருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலத்தின் பல இடங்களில் சமூக ஆர் வலர்கள், அரசியல் கட்சியினர், பொது நல அமைப்பினர், கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். மேலும், காவல் துறை நிர்வாகத் திடம் புகார் மூலம் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, 'இந்த சம்பவத்தில் அரசியல் பிரமுகர்கள், அவர்களின் உறவினர்கள், தொழிலதிபர்கள் போன் றோருக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்ய வேண்டும்' என மகளிர் அமைப்புகள், வழக் கறிஞர்கள் தரப்பில் வலியுறுத்தப் பட்டது.

இந்த வழக்கின் தீவிரத்தை கருத் தில் கொண்டு, வழக்கு விசார ணையை சிபிஐக்கு மாற்றம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக டிஜிபி பரிந்துரை செய்துள்ளார்.

முன்னதாக, இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்ய வலி யுறுத்தி கோவை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா மூலம், டிஜிபிக்கு பரிந் துரை செய்தார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டிருந்தது.

கைதானவருக்கு உதவிய பெண் தோழி போலீஸ் விசாரணையில் தகவல்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விவகாரத்தில் கைதாகியுள்ள திருநாவுக்கரசு என்பவர் தலைமறைவாக இருப்பதற்கு அவரது பெண் தோழி ஒருவர் உதவியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: பார்ப்பதற்கு சினிமா கதாநாயகன்போல இருப்பதால், கல்லூரி காலத்திலேயே திருநாவுக்கரசு ரோமியோபோல் வலம் வந்துள்ளார். அதை வைத்து இளம் பெண்களை தன் பக்கம் திருப்பி, அவர்களது செல்போன் எண்களை பெற்றுள்ளார். அந்த எண்களை திருநாவுக்கரசு தனது நண்பர் சபரிராஜனிடம் கொடுக்க, அவர் ஆசை வார்த்தை கூறி அப்பெண்களை ஏமாற்றி உள்ளார்.

பிக்னிக் போகலாம் என தன்னிடம் ஏமாந்த பெண்களை வரவழைக்கும் சபரிராஜன், அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பார். இதை முன்னரே திட்டமிட்டபடி, மறைந்து இருக்கும் திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் வீடியோ எடுத்து, அதை காட்டி மிரட்டி அந்தப் பெண்களை பலாத்காரம் செய்துள்ளனர்.

திருநாவுக்கரசுக்கு நெருக்கமாக உள்ள பெண் தோழி ஒருவர், ஏராள மான மாணவிகளை அவருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும், திருநாவுக்கரசு போலீஸால் தேடப்பட்டு வந்த காலத்தில், அவர் தலைமறைவாக இருக்க அந்த பெண் தோழி உதவி செய்தது விசாரணையில் தெரியவந்தது. இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர். ஆதாரங்களை திரட்டி அந்த பெண் தோழியை கைது செய்யவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது

பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், மாவட்ட ஆட்சியர் ராஜாமணிக்கு நேற்று முன்தினம் பரிந்துரை செய்தார். இதை ஏற்று 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் ராஜாமணி நேற்று உத்தரவிட்டார்.

தற்கொலை வழக்குகள்: இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாராவது தற்கொலை செய்து கொண்டனரா என்பதை கண்டறிய, கடந்த 3 ஆண்டுகளில் பொள்ளாச்சியில் தற்கொலை செய்த மாணவிகள், பெண்கள் எத்தனை பேர், எந்த காரணத்துக்காக அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து மீண்டும் விசாரிக்க காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் போலீஸார் மீண்டும் தற்கொலை வழக்குகளை தூசி தட்டியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x