

கும்பகோணத்தை அடுத்த சுந்தர பெருமாள்கோவிலில் மறைந்த ஜி.ஆர்.மூப்பனார் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜி.ரெங்கசாமி மூப்பனார் (86). இவர், மறைந்த ஜி.கே.மூப்பனாரின் சகோதரர்.
தமாகா செயற்குழு உறுப்பின ராகவும், திருவையாறு ஸ்ரீ தியாக பிரும்ம சபாவின் தலைவராகவும், கும்பகோணம் நாட்டியாஞ்சலி விழா குழுவின் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர்.
கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த இவர், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி.கே.வாசனின் வீட்டில் நேற்று முன்தினம் இறந்தார். அதன்பின், அவரது உடல் சொந்த ஊரான சுந்தரபெருமாள்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று ஜி.ஆர்.மூப்பனாரின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், ஜி.கே.வாசன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, மயிலாடு துறை தொகுதி திமுக வேட்பாளர் செ.ராமலிங்கம், எம்எல்ஏக்கள் சாக்கோட்டை க.அன்பழகன், கோவி.செழியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதேபோல, மாநில அமைச்சர் கள் இரா.துரைக்கண்ணு, ஓ.எஸ். மணியன், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் கிருஷ்ண சாமி வாண்டையார், லோகநாதன், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, கருப்பு முருகானந்தம், அமமுக மாநில பொருளாளர் எம்.ரங்கசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், இறுதிச் சடங்குகளுக் குப் பிறகு நேற்று மாலை உடல் தகனம் செய்யப்பட்டது.