Published : 29 Sep 2014 11:36 AM
Last Updated : 29 Sep 2014 11:36 AM

அரசு பஸ்கள் மீண்டும் இயங்கின

முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தால் நிறுத்தப்பட்ட அரசு பஸ்கள் நேற்று காலை முதல் படிப்படியாக இயக்கப்பட்டன.

இதேபோல், மாநிலத்தின் பல் வேறு பகுதிகளிலும் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததால், பயணி களின் பாதுகாப்பு கருதி பல்வேறு இடங்களுக்கு செல்லும் விரைவுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், நேற்று காலை முதலே நிலைமை சீராக இருந்தது. ஆங்காங்கே போலீஸார் குவிக் கப்பட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதையடுத்து, நேற்று காலை முதல் பஸ்கள் படிப்படியாக இயக் கப்பட்டன. குறிப்பாக திருச்சி, கோவை, மதுரை, நெல்லை, சேலம், கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களுக்கு விரைவு பஸ்கள் இயக்கப்பட்டன. இதே போல், சென்னையில் காலை முதல் படிப்படியாக மாநகர பஸ்கள் இயக் கப்பட்டன. மக்களின் தேவைக்கு ஏற்றவாறு குறைத்து இயக்கப் பட்டது. சென்னையில் இயக்கப் படும் கர்நாடக அரசு போக்கு வரத்துக் கழக பஸ்கள் தமிழகத் தில் இயக்கப்படவில்லை, பணி மனைகளில் நிறுத்தி வைக்கப்பட் டன. மேலும், தமிழக அரசு பஸ் களும் தமிழக கர்நாடக எல்லை யான ஒசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டன.

இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘தமிழகத்தில் நேற்று முன் தினம் சில இடங்களில் ஏற்பட்ட வன்முறை காரணமாக பயணி களின் பாதுகாப்பு கருதி பஸ்கள் நிறுத்தப்பட்டன. நேற்று காலை யில் நிலைமை சீரானதால், மீண்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. பெங் களூர் தவிர, பெரும்பாலான வழித் தடங்களில் பஸ்கள் இயக்கப் படுகின்றன.

இருப்பினும் இது நிலை யானது அல்ல, திடீரென அசம்பா விதம் நடந்துவிட்டால் பஸ்கள் நிறுத்தப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x