Published : 02 Mar 2019 08:38 AM
Last Updated : 02 Mar 2019 08:38 AM

பிரதமர் மோடியின் பின்னால் தமிழகம்: கன்னியாகுமரி கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி புகழாரம் 

பிரதமர் மோடியின் பின்னால் தமிழகம் இருக்கிறது என கன்னியா குமரி கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத் தில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது: கன்னியா குமரி மாவட்டத்தில் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத் தும் பணி மேற்கொள்ளப்படும். இங்கு கடலரிப்பு தடுப்புச் சுவர் நவீன முறையில் அமைக்கப்படும். தேங்காய்ப்பட்டினத்தில் ஒருங் கிணைந்த மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.

ஆழ்கடல் மீன்பிடிப்பை உறுதி செய்யும் வகையில் மீனவர் குழு வினருக்கு கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. செயற்கைகோள் போன் கள் வழங்கப்பட்டுள்ளன. மாவட் டம் முழுவதும் சிறு பாலங் கள் அமைக்கப்பட்டு வருகின்றன. நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சி யாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் கவிமணிக்கு ரூ.1 கோடியில் மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்துள்ளோம்.

பயங்கரவாதிகள் தாக்குத லுக்கு உறுதியுடன் நாடே பாராட்டத் தக்க வகையில் நடவடிக்கை மேற் கொண்ட பிரதமருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். மீனவர்களைப் பாது காக்கவும், கடலில் காணாமல் போகும் மீனவர்களை கண்டு பிடிக்கவும் கன்னியாகுமரி கடல் பகுதியில் ஹெலிகாப்டர் தளம் அமைப்பதுடன், நவீன மீட்பு கருவி கள் வழங்க வேண்டும். நாட்டின் பாதுகாப்புக்காக பிரதமர் மேற் கொண்ட நடவடிக்கையால் ஒட்டு மொத்த நாடே அவருடன் நிற் கிறது. தமிழகமும் அவர் பின்னால் இருக்கிறது என்றார் அவர்.

நரசிம்ம அவதாரம்

நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: இந்த விழா, விரைவில் அடைய இருக்கும் இமாலய வெற்றியின் தொடக்கம். அண்டை நாடுகளின் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு அடி பணியாமல் நரசிம்ம அவதாரம் எடுத்ததுபோல், நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளை வதம் செய்ததை பார்த்து பார் முழுவதும் பாரத பிரத மரை போற்றுகிறது, பாராட்டுகிறது.

தீவிரவாதத்துக்கு எதிராக துணிச்சலான நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு தமிழக மக்கள் சார் பில் நன்றி தெரிவிக்கிறேன். முன் னாள் முதல்வர் ஜெயலலிதாவும், பிரதமர் நரேந்திர மோடியும் ஒத்த சிந்தனையுடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர் என்றார்.

முதல்வர் சென்ற விமானத்தில் கோளாறு

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவில் கலந்துகொள்ள செல்வதற்காக தமிழக முதல்வர் பழனிசாமி சென்னை விமான நிலையத்துக்கு நேற்று காலை சுமார் 7 மணிக்கு வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்று, அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி செல்ல முதல்வர் திட்டமிட்டிருந்தார். தூத்துக்குடிக்கு காலை 7.55 மணிக்கு புறப்பட்ட விமானத்தில் முதல்வர் பயணம் செய்தார். விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம் காலை 8.20 மணிக்கு மீண்டும் சென்னைக்கு திரும்பியது. பின்னர் 8.50 மணிக்கு மதுரைக்கு செல்லும் விமானத்தில் முதல்வர் பயணம் செய்தார். மதுரையில் இருந்து கார் மூலம் கன்னியாகுமரிக்கு சென்று பிரதமர் பங்கேற்கும் விழாவில் கலந்து கொண்டார். முதல்வர் சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x