Last Updated : 08 Mar, 2019 08:02 AM

 

Published : 08 Mar 2019 08:02 AM
Last Updated : 08 Mar 2019 08:02 AM

நடந்துவரும் சாலை பணிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியதால் விமர்சனம்

ஓராண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டு நடந்துவரும் நான்குவழி சாலை பணிகளுக்கு, பிரதமர்தற்போது அடிக்கல் நாட்டியதுவிமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 6-ம் தேதி நடந்தது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, முன்னதாக அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று, தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

அதில் ஒரு பகுதியாக, ‘45-சி’ தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி - சேத்தியாத்தோப்பு பிரிவு, சேத்தியாத்தோப்பு - சோழத்தரம் பிரிவு, சோழத்தரம்- தஞ்சை பிரிவு ஆகியவற்றை ரூ.3,517 கோடியில் நான்குவழிச் சாலையாக மாற்றும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த சாலைப் பணிகள் 2018 பிப்ரவரி மாதமே தொடங்கப்பட்டு, 10 சதவீதப் பணிகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணைய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘விக்கிரவாண்டி முதல் தஞ்சை வரையிலான 165 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை நான்குவழி சாலையாக 2006-ல் தரம் உயர்த்தப்பட்டு, 2010-ல் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. 2015-ல் விக்கிரவாண்டி - தஞ்சாவூர் சாலையையும், வழியில் உள்ள பாலங்களையும் அமைக்க ரூ.1,200 கோடி ஒதுக்கப்பட்டது. 2020-க்குள் பணியை முடித்து 2021-ல் மக்கள்பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்’’ என்றனர்.

இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவரும், கடலூர் முன்னாள் எம்.பி.யுமான கே.எஸ்.அழகிரியிடம் கேட்டதற்கு, ‘‘ஐ.மு. கூட்டணிஆட்சியின்போது, இதற்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு 16 முறை டெண்டர் விடப்பட்டது. ஒப்பந்த அடிப்படையில் யாரும் முன்வராத பட்சத்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் பணிகளை தொடங்குமாறு, கடலூர்எம்.பி. என்ற முறையில் கோரிக்கைவைத்தேன். முழுவீச்சில் நடக்கும்சாலைப் பணிகளுக்கு பிரதமர்தற்போது அடிக்கல் நாட்டியது வியப்பாக உள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x