

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முன்தினம் மாலையே அமலுக்கு வந்தன. இந்நிலையில், திருவாரூர் அடுத்த கானூரில் உள்ள சோதனைச் சாவடி யில் நேற்று காலை போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது, நாகப்பட்டி னத்தில் இருந்து திருச்சி நோக் கிச் சென்ற ஒரு சொகுசு காரை நிறுத்தி போலீஸார் சோதனை நடத்தினர். சோதனையில் வாகனத் தின் டிக்கியில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக ரூ.50 லட்சம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது. இதை யடுத்து, அந்தப் பணத்தை போலீ ஸார் பறிமுதல் செய்தனர்.
பணம் பறிமுதல் செய்யப்பட்ட காரில் வந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது உட்பட 3 பேரிடம் தஞ்சை சரக டிஐஜி லோகநாதன், மாவட்ட எஸ்பி துரை, கோட்டாட்சியர் முருகதாஸ் ஆகி யோர் விசாரணை நடத்தினர்.
பெரம்பலூரில் ரூ.8.44 லட்சம்
இதேபோல, பெரம்பலூர் மாவட் டம் ஆலத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் பழனிச்செல்வன் தலை மையிலான தேர்தல் பறக்கும் படையினர் திருமாந்துறை சுங்கச் சாவடி அருகே, லப்பைக்குடிக்காடு பிரிவு ரோடு பகுதியில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே சென்ற லப்பைக்குடிக்காட்டைச் சேர்ந்த ஆஷிம்பாட்ஷா என்பவர் உரிய ஆவணமின்றி காரில் எடுத்து சென்ற ரூ.67,500-ம், அதே பகுதி யைச் சேர்ந்த கணேசன் என்பவர் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் சென்ற ரூ.75,200, திருச்சியைச் சேர்ந்த முட்டை நிறுவன ஓட்டு நர் சேகர் என்பவர் உரிய ஆவண மின்றி சரக்கு ஆட்டோவில் எடுத் துச் சென்ற ரூ.71,790 பறிமுதல் செய்யப்பட்டது.
பறக்கும் படையினர் சோதனை
பெரம்பலூர் துணை தாசில்தார் கருணாகரன் தலைமையிலான தேர் தல் பறக்கும் படையினர், பெரம் பலூர்- ஆத்தூர் சாலையில் அன்ன மங்கலம் கைகாட்டி அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்ட போது, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குளத்துப்புழா பகுதி யைச் சேர்ந்த பிரேம்குமார் என்ப வர் காரில் எடுத்து சென்ற ரூ.3 லட்சம், சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் எடுத்துச் சென்ற ரூ.1 லட்சம் உரிய ஆவணமில்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.
5 பேரிடம் பறிமுதல் செய் யப்பட்ட ரூ.6.14 லட்சம் ரொக் கம் அரசு கருவூலத்தில் சேர்க்கப் பட்டது. பெரம்பலூர் நான்கு ரோட்டில் தூத்துக்குடி மணி என்பவரிடம் ரூ.2.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆலங்குளத்தில் ரூ.20 லட்சம்
திருநெல்வேலி மாவட்டம், வீரகேரளம்புதூர் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் கோமதி சங்கரநாராயணன் தலை மையிலான பறக்கும்படை அதிகாரிகள், ஆலங்குளம் அருகே அத்தியூத்தில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் சங்கர்ராஜ் வந்த காரில் ரூ.20 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், உரிய ஆவணங்களை காட்டி திரும்ப பெற்றுச் செல்லு மாறு அறிவுறுத்தினர்.