Last Updated : 28 Mar, 2019 10:22 AM

 

Published : 28 Mar 2019 10:22 AM
Last Updated : 28 Mar 2019 10:22 AM

ஆண்டுக்கு ரூ.1 கோடி ஊதியம் பெறுபவர் தஞ்சாவூர் இடைத்தேர்தலில் போட்டி: சிங்கப்பூரிலிருந்து வந்து சுயேச்சையாக மனுத்தாக்கல்

சிங்கப்பூரில் ஆண்டுக்கு ரூ.1 கோடி ஊதியம் பெற்றுவரும் ஒருவர், தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

தஞ்சாவூர் வைரம் நகரைச் சேர்ந்தவர் பொன்.பழனிவேல்(50). அமெரிக்கா, லண்டன், ஆஸ்தி ரேலியா ஆகிய நாடுகளில் படித்து பட்டங்களை வாங்கியுள்ள இவர், சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் முதன்மை மேலாளராகப் பணியாற்றி வருகிறார். குடும்பத்துடன் சிங்கப் பூரில் வசித்து வருகிறார்.

ஆண்டு ஒன்றுக்கு ரூ.1 கோடி வரை ஊதியமாகப் பெற்றுவரும் பழனிவேல், தஞ்சாவூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சிங்கப்பூரிலிருந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து பழனிவேல் கூறியதாவது: நான் தஞ்சாவூரை அடுத்த காராமணிதோப்பு கிராமத்தைச் சேர்ந்தவன். ஈச்சங்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த போது கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றேன். பின்னர் நாகையில் பாலிடெக்னிக் படித்தேன். தெற்கு ரயில்வேயிலும், பின்னர் இந்திய ரிசர்வ் வங்கியிலும் பணியாற்றிய நான் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சிங்கப்பூர் சென்றேன். அங்கிருந்து லண்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சென்று பல்வேறு பட்டப் படிப்புகளைப் படித்தேன்.

தற்போது மனைவி, மகள், மகன்களுடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறேன். தஞ்சாவூர் வைரம் நகரில் சொந்த வீடு உள்ளது. இந்தி யாவில் உள்ளதுபோன்ற ஜன நாயக அமைப்பு முறையிலான அரசியல் என்பது உலகில் வேறு எந்த நாடுகளிலும் கிடையாது. தூய்மையான இந்திய தேர்தல்களம், ஒரு சில அரசியல் வாதிகளால் மாசடைந் துள்ளது. இலவச திட்டங்களால் மக்களை அரசியல்வாதிகள் அடிமைகளாக வைத்துள்ளனர். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் நான் அரசி யலில் ஈடுபட முடிவு செய்தேன்.

இதையடுத்து கடந்த மார்ச் 3-ம் தேதி சிங்கப்பூரிலிருந்து தஞ்சாவூர் வந்தேன். தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து சுயேச்சையாக வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளேன். என்னு டைய மனு ஏற்கப்பட்டுள்ளது. அரசியல் தொடர்பாக ஒவ் வொரு இந்திய குடிமகனுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதை மையப்படுத் தியே என் பிரச்சாரம் இருக்கும். ஏற்கெனவே கடந்த 2014-ம் ஆண்டு திருச்சி மக்கள வைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு 687 வாக்குகள் பெற்றுள்ளேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x