Published : 06 Sep 2014 09:55 AM
Last Updated : 06 Sep 2014 09:55 AM

பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம்: செப்.8 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - தாட்கோ அறிவிப்பு

பழங்குடியினர் மேம்பாட்டுக்காக தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு செப்டம்பர் 8ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பழங்குடி மக்களின் முன்னேற்றத் துக்காகப் நிலம் மேம்பாட்டுத் திட்டம், தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்புத்திட்டம், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு சுழல்நிதி, பொருளாதார கடன் உதவி உட்பட பல்வேறு திட்டங்கள் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படுகின்றன.

இத்திட்டங்களுக்கு விண்ணப் பிப்பவர்களின் ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இளைஞர் சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயணியர் வாகனம் வாங்க ரூ.8 லட்சம், கனரக வாகனம் வாங்க ரூ.11 லட்சம் மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கப்படும். இத்திட்டத்துக்கு விண்ணப்பிப்பவர் ஓட்டுநர் உரிமம், பேட்ஜ் மேலொப்பம் பெற்றிருக்கவேண்டும். 18 வயது நிரம்பியவராகவும் 35 வயதுக்குள் உள்ளவராகவும் இருக்கவேண்டும். மற்ற திட்டங்களுக்கு வயது உச்ச வரம்பு 55 ஆகும். மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்பும்

பழங்குடியினர் http://fast.tahdco.com என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத் தினை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.

விண்ணப்பத்தை பதிவு செய்யும்போது குடும்ப அட்டை / இருப்பிடச் சான்று, சாதிச் சான்று (வருவாய் கோட்டாட்சியரால் (ஆர்.டி.ஓ.) வழங்கப்பட்டது), வருமான சான்று, கல்வித் தகுதி மற்றும் வயதுக்கான ஆதார சான்றுக்கு (பள்ளி மாற்றுச் சான்று / வாக்காளர் அடையாள அட்டை / ஓட்டுநர் உரிமம் / பான் கார்டு / ஆதார் அட்டை / மதிப்பெண் சான்று) இவற்றில் ஏதாவது ஒன்றையும் மற்றும் TIN நம்பர் உள்ள நிறுவனத்திடமிருந்து பெற்ற விலைப்புள்ளி, திட்ட அறிக்கை பெறப்பட்ட தேதியையும் அதற்கான இடத்தில் குறிப்பிட்டு திட்ட அறிக்கை மற்றும் புகைப் படத்தையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க உதவி தேவைப் படுபவர்களின் வசதிக்காக அனைத்து தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகங்களிலும் ரூ.20 செலுத்தி விண்ணப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x